SELANGOR

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களுக்கான நன் அரசாங்கமாக விளங்குகிறது

18 ஏப்ரல் 2018, 12:53 PM
சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களுக்கான நன் அரசாங்கமாக விளங்குகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 17

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இம்மாநிலத்தில் முன்னெடுக்கும் ஒவ்வொன்று மக்களின் நலனை கருத்தில் கொண்டது என மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் கூறினார்.இங்கு ஊழலும் தத்தம் பதவியை தவறாக பயன்படுத்தும் போக்கிற்கும் துளியும் இடம் இல்லை என்றார்.மாநில மந்திரி பெசாரின் திறன் மிக்க நிர்வாகமும் வெளிப்படையான போக்குமே அதற்கு பெரும் வழி தடமாக விளங்குவதாகவும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தை பாக்காத்தான் அரசாங்கம் கடந்த 2008ஆம் ஆண்டில் கைப்பற்றியது முதல் இம்மாநிலத்தில் அனைத்து மக்கள் பிரச்னைகளும் விவேகமாக கையாளப்பட்டதாக மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுஹாய்மி ஷஃப்பி குறிப்பிட்டர்.மேலும்,மக்கள் எதிர்நோக்கிய பெரும் நிலப்பிரச்னைகளில் எந்தவொரு அரசியல்வாதியும் உள்ளடங்கவில்லை.எந்த நிலத்திற்கு அரசியல்வாதிகள் ஏகபோக உரிமையை கொண்டிருக்கவில்லை எனவும் ஸ்ரீமுடா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் திறன் மிக்க செயல்பாட்டினால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மன்றங்களில் எந்தவொரு ஊழலும் நடக்கவில்லை.தத்தம் பதவியினை தவறாக பயன்படுத்தும் போக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் பாக்காத்தான் ஆட்சியின் வேரறுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையால்,நிலத்தை உரிமைக் கொள்ள மக்களுக்கு உரிமை அளிக்கப்பட்டதாகவும் எந்தவொரு அரசியல்வாதியின் தலியீடும் இல்லாமல் மக்கள் தங்களுக்கான நிலத்தை கையடக்கம் செய்ய அஃது வழிவகுத்ததாகவும் கூறினார்.இதற்கு முந்தைய ஆட்சியில் அரசியல்வாதிகள் முடிவெடுத்த பின்னர்தான் அஃது மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான அரசாங்கத்தில் அது நிகழவில்லை என்றும் கூறினார்.

மேலும்,எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரின் தலையீடும் இல்லாமல் நில விவகாரங்கள் கையாளப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர் இதன் மூலம் தத்தம் பதவிகளை தவறாக பயன்படுத்தும் போக்கு முற்றாக அழிக்கப்பட்டதோடு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு நிலங்களை ஒதுக்கும் போக்கும் நிகழவில்லை என்று தெரிவித்தார்.

சிலாங்கூரின் ஊராட்சி மன்றங்கள் வெளிப்படையாகவும் எந்தவொரு அரசியல்வாதியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத சூழலை உருவாக்கியதன் மூலம் அவை மிகவும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வழிசெய்ததாகவும் கூறிய சுஹாய்மி சட்டமன்ற உறுப்பினர்களை ஊராட்சி மன்றத்தில் அமர்த்தும் போது அவர்கள் டத்த்ப்ப் பண்டார்களை காட்டிலும் அதிகாரம் கொண்டவர்களாக உருமாறி விடுகிறார்கள்.இதனால் ஊழலும் பதவியை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரிக்கிறது.ஆனால்,சிலாங்கூரில் பாக்காத்தான் ஆட்சியில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.