SELANGOR

அஸ்மின்:கெஅடிலான் மும்முணைப் போட்டி நிலவினாலும் வெற்றி பெற முடியும்

9 ஏப்ரல் 2018, 7:23 AM
அஸ்மின்:கெஅடிலான் மும்முணைப் போட்டி நிலவினாலும் வெற்றி பெற முடியும்

சுங்கை பூலோ , ஏப்ரல் 9:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் மும்முணைப் போட்டி நிலவும் சூழ்நிலையில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெறும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். 2009-இல் நடந்த புக்கிட் செலாம்பாவ் இடைத்தேர்தலில் 15 முணைப் போட்டி நிலவும் சூழ்நிலையிலும் மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆகவே மும்முணைப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

"  மும்முணைப் போட்டியாகட்டும் அல்லது நான்கு முணைப் போட்டியாகட்டும், நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். சிலாங்கூர் மாநிலம் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியிடமே இருக்கும். கெஅடிலான் ஏற்கனவே 15 முணைப் போட்டி நிலவும் போதே நாம் வெற்றி பெற்றுள்ளோம்," என்று பாயா ஜெராஸில் நடைபெற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.