NATIONAL

புதிய மலேசியாவை புத்ரா ஜெயாவில் உருவாக்குவோம் !!!

6 ஏப்ரல் 2018, 5:11 AM
புதிய மலேசியாவை புத்ரா ஜெயாவில் உருவாக்குவோம் !!!
புதிய மலேசியாவை புத்ரா ஜெயாவில் உருவாக்குவோம் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 6:

மலேசிய மக்கள், புத்ரா ஜெயாவில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமையில் ஒரு புதிய அரசாங்கம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். நாட்டில் புதுமையை  ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் மக்களுக்கு நல்ல ஒரு தேர்வாக பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அமையும் என்பதில் ஐயமில்லை என்றார்.

"  பயம், மோசடிகள் மற்றும் ஒற்றுமையின்மை போன்றவைகளை தூக்கி எறியும் காலம் கனிந்து விட்டது. புதிய நம்பிக்கையை ஏற்படுத்த நாட்டு மக்கள் தயாராக இருக்கின்றனர்.  சமசீரான மற்றும் மேம்பாடு அடைந்த  வாழ்க்கையை நாட்டு மக்கள் வாழ தயாராக உள்ளனர். பொது மக்கள் பழைய வாழ்க்கையை வாழப் போகிறார்களா அல்லது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் புதிய மலேசியாவை தேர்ந்தெடுக்க போகிறார்களா? எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தல் ஜனநாயக முறையில் ஒரு சிறந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பாகும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.