NATIONAL

தேர்தல் முரசு ஒலித்துவிட்டது; பாக்காத்தானே நமது தேர்வு...

6 ஏப்ரல் 2018, 5:08 AM
தேர்தல் முரசு ஒலித்துவிட்டது; பாக்காத்தானே நமது தேர்வு...

ஷா ஆலம், ஏப்ரல் 6:

எதிர் வரும் 14-வது பொது தேர்தல், மலேசிய மக்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் வகையில் அமையும் என்றும் பொது மக்கள் புத்ரா ஜெயாவை நிர்வகிக்க பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுத்து நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று  சிலாங்கூர் அரசாங்க ஆதரவு கிளப்பின் தலைவர் எங் சியூ லிம் கூறினார்.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத் திறமை மாநிலத்தின் அபரீத வெற்றிகளை தந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அடைவு நிலை, புத்ரா ஜெயாவின் மத்திய அரசாங்கத்தை சிறப்பாக வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது என்றார்.

"  சிலாங்கூரின் வெற்றி, மாநிலத்தின் நிர்வாக திறமையை நிரூபித்துள்ளது. சிலாங்கூர் மாநிலம் மலேசிய நாட்டின் எதிர்காலம் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே, பொது மக்கள் சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கத்தை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், புத்ரா ஜெயாவில் மக்கள் நல அரசு அமைய கொள்ளைக்கார அம்னோ தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்தி பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.