SELANGOR

தொகுதி மறுசீரமைப்பு & மும்முணைப் போட்டியையும் தாண்டி சிலாங்கூர் மாநிலத்தை தற்காக்க முடியும்

31 மார்ச் 2018, 10:09 AM
தொகுதி மறுசீரமைப்பு & மும்முணைப் போட்டியையும் தாண்டி சிலாங்கூர் மாநிலத்தை தற்காக்க முடியும்

ஷா ஆலாம், ஏப்ரல் 1:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில்  புதிய தேர்தல் எல்லை மறுசீரமைப்பு மற்றும் மும்முணைப் போட்டியில் ஓட்டுகள் பிரிந்தாலும் பாக்காத்தான் அரசாங்கத்தை சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தற்காக்க முடியும் என்று சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த நம்பிக்கை, சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சிறந்த நன்முயற்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளதில் வெற்றி பெற்றதில் மூலம்  தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தார்.

"  சிலாங்கூர் மாநிலம் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வசம் இருக்கும். இந்த நம்பிக்கையின் அடிப்படை காரணம் என்னவென்றால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில் மாநில மக்கள் நல்ல பயன்களை பெற்றுள்ளார்கள். மக்களவையில் ஒப்புதல் பெற்ற புதிய தேர்தல் எல்லை மறுசீரமைப்பை நாம் ஆய்வு செய்வோம். ஆனாலும், மக்களின் பேராதரவோடு மீண்டும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தங்களின் சேவையை தொடர்ந்து செயல்படுத்தும்," என்று ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது 2018-ஆம் ஆண்டின் புத்தக கண்காட்சி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கு.குணசேகரன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.