ஷா ஆலாம்,மார்ச் 26:
உடைந்த குழாய்கள் மற்றும் பழுதான குழாய்களை உடனடியாக மாற்றி உயிர்ப்பான நடவடிக்கையினை விவேகமாய் மேற்கொண்ட சிலாங்கூர் அரசை சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷராஃப்புடின் இட்ரிஸ் ஷா வெகுவாக பாராட்டினார்.
மாநில அரசின் இந்த செயல்பாட்டினால் நீர் நிலை 32.6 விழுகாட்டிலிருந்து 30.1 விழுகாடாக குறைந்தது.வெ.373.7 மில்லியன் நிதியில் சுமார் 422.5 கி.மீட்டர் தூரம் பழைய குழாய்களை மாற்றி புதுப்பித்தது விவேகமானது என்றார்.
இந்நடவடிக்கையின் மூலம் வெ.53.8 மில்லியன் நிதி சேமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட சுல்தான் இதன் மூலம் செமிஞ்சேவில் நீர் சுத்திகரிப்பு மட்டும் சேமிப்பு மையம் கட்டுவதற்கு வழிகிட்டியது.அஃது வெ.177 மில்லியனை கொண்டது.அம்மையம் மார்ச் 1ஆம் தேதி முதல் முழுமையாக இயங்க தொடங்கியது என்றும் சுல்தான் நினைவுக்கூர்ந்தார்.
இதற்கிடையில்,லபூஹான் டஹாங்கான் நீர் சுத்திகரிப்பு மையத்தின் மேம்பாடு பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடையும்.சுமார் வெ.497 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் நிலையில் இதன் மூலம் 200 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க முடியும் என்றும் சுல்தான் குறிப்பிட்டார்.
இவ்விரு நீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் சேமிப்பு மையங்கள் மூலம் சிலாங்கூரில் 300 மில்லியன் லிட்டர் சுத்தமான நீரை சிலாங்கூர் மாநிலம் சேமிக்கும் என்றும் கூறினார்.
13வது சட்டமன்ற கூட்டத் தொடரை தொடக்கி வைத்து பேசுகையில் சுல்தான் இதனை கூறினார்.மேலும்,மாநிலத்தின் நீர் சேமிப்பு கையிருப்பு 3.99 விழுகாட்டிலிருந்து 11.82 விழுகாட்டிற்கு லபூஹான் டஹாங் நீர் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு மையம் 1 ஜனவரி 2019இல் அது செயல்பட தொடங்கிய பின்னர் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


