NATIONAL

பாக்காத்தானின் தேர்தல் வாக்குறுதிகள்: பெடுலி சேஹாட் திட்டம் மலேசியா முழுவதும் விரிவுப் படுத்தப்படும்

9 மார்ச் 2018, 2:19 AM
பாக்காத்தானின் தேர்தல் வாக்குறுதிகள்: பெடுலி சேஹாட் திட்டம் மலேசியா முழுவதும் விரிவுப் படுத்தப்படும்
பாக்காத்தானின் தேர்தல் வாக்குறுதிகள்: பெடுலி சேஹாட் திட்டம் மலேசியா முழுவதும் விரிவுப் படுத்தப்படும்

ஷா ஆலம், மார்ச் 9:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்திய பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம், எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றி சாதனை படைக்கும் 100-வது நாளுக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று நேற்று ஐடீல் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற 'நாட்டை உருவாக்குவோம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்'  கருப்பொருளில் அறிவிக்கப்பட்ட பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் '100 நாட்களில் 10 வாக்குறுதிகள்' என்ற 14-வது பொதுத் தேர்தலுக்கான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தில் பி40 வர்க்கத்தினர் ரிம 500 மதிப்பிலான சிகிச்சையை தனியார் கிளினிக்கில் பெற்றுக் கொள்ளலாம்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஐந்து அடிப்படை கூறுகளை உள்ளடக்கியது:-

1. மக்களின் வாழ்க்கை சுமைகளை குறைப்பது

2. நாட்டின் நிர்வாகம் மற்றும் அரசியல் மறுமலர்ச்சி

3. நீதியான மற்றும் சமசீரான பொருளாதார வளர்ச்சி

4. 1963 மலேசிய ஒப்பந்த அடிப்படையில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்

5. உலக ரீதியில் தலைசிறந்த, மிதவாத மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மலேசியாவை உருவாக்குவது

#தமிழ் பிரியன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.