SELANGOR

இந்தியர்கள் கலந்து கொள்ளும் பலக்கோங் ஜசெகவின் இந்திய விருந்தோம்பல் நிகழ்வு

8 மார்ச் 2018, 10:51 AM
இந்தியர்கள் கலந்து கொள்ளும் பலக்கோங் ஜசெகவின் இந்திய விருந்தோம்பல் நிகழ்வு

பலாக்கோங், மார்ச் 8:

பலக்கோங் ஜசெகவின் விருந்தோம்பல் நிகழ்வு வருகின்ற 11/3/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 7க்கு இனிதே நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 1200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஏற்பாட்டு குழு தலைவர்களான காஜாங் நகராண்மைக்கழக உறுப்பினரும் பலக்கோங் ஜெயா ஜசெகவின் கிளைத் தலைவர் திரு. தியாகராஜன் ராஜகோபாலும் பலக்கோங் இந்திய சமூகத் தலைவருமான திரு. கிறிஸ்டி லூயிஸ் பிரான்சிஸ் இருவரும் தெரிவித்தனர்.

1 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் ஜசெகவின் முதல் நிகழ்வு இந்த நிகழ்வே ஆகும்.

இந்நிகழ்வில், ஜசெகவின் தலைவர்களான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ், மாண்புமிகு செனட்டர் சந்திரமோகன், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவகுமார், சேனாவாங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணசேகரன், பலகோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எடி ங் மற்றும் செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் ஓங் கியான் மெங் இவர்களோடு நகராண்மைக் கழக உறுப்பினர்களும் இந்திய சமூகத் தலைவர்களும், ஜசெகவின் முக்கிய பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

பலக்கோங் வட்டாரத்தில் இந்திய சமூகத் தலைவர்களும் அவர்களின் உறுப்பினர்களும் தரமான சேவை செய்து வருகின்றனர். சமீபத்தில் 379 அன்பு தாய் விவேக அட்டை

(KISS) வழங்கியதில் 167 பேர் இந்திய தாய்மார்கள் ஆவார்கள்.

மேலும் சிலாங்கூர் மாநிலத்தின் இலவச பிரத்தியேக வகுப்பு (Tuisyen Rakyat) 56 எஸ்பிஎம் மாணவர்களில் 17 இந்திய மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

சிலாங்கூர் மாநிலத்தின் மக்களுக்கான 45 திட்டங்களும் இங்குள்ள மக்களுக்கு கொண்டு செல்ல இந்த வட்டார சமூகத் தலைவர் குழுவினர் மிகவும் பாடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வின் விபரம்

தேதி : 11.3.2018 நேரம் : மாலை மணி 7

இடம் : Jalan Perusahaan , Selasa Jaya (Behind Petronas Taming Kiri) Balakong

தொடர்புக்கு :-

கிறிஸ்டி லூயிஸ் பிரான்சிஸ் – 012-3456040

திரு. தியாகராஜன் – 013-3322418

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.