NATIONAL

சேவியர்: ஹிண்ட்ராப் & நியூஜென் கட்சிகள் பக்காத்தான் ஹாராப்பானின் கூட்டணி கட்சிகள் இல்லை !!!

8 மார்ச் 2018, 1:22 AM
சேவியர்: ஹிண்ட்ராப் & நியூஜென் கட்சிகள் பக்காத்தான் ஹாராப்பானின் கூட்டணி கட்சிகள் இல்லை !!!

ஷா ஆலாம், மார்ச் 7:

ஹிண்ட்ராப்பும் நியூஜென் கட்சியும் எங்களின் வியூக பங்காளிகளே தவிர கூட்டணி கட்சியின் அங்கம் இல்லை என்று கெஆடிலான் கட்சியின் உதவி தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெளிவுப்படுத்தினார். நேற்று முன்தினம் டாக்டர் மகாதீர் வெளியிட்ட அறிக்கையை ஒட்டி, கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் நிலவியதை தொடர்ந்து அதற்கான விளக்கத்தை அவர் தெரிவித்தார்

டாக்டர் மகாதீரின் அறிக்கையை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல் சிலர் வாட்சாப்பில் பக்காத்தான் ஹாராப்பான் தன் கொள்கைகளில் இருந்து விலகி செல்வதுப்போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கெஆடிலானும், டிஏபியும் அனைத்து இனத்தவரையும் அரவணைக்கும் கட்சி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, இந்தியர்களின் துணையுடன் அது தன் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டு இருப்பதுடன் பல இந்திய தலைவர்களையும் அக்கட்சிகள் உருவாக்கி இருப்பதுடன் அவர்களுக்கு பதவிகளும் அங்கீகாரங்களும் வழங்கியும் வருகின்றது.

அதேப்போல் பெர்சத்து  மலாய்காரர்களுகாக உதயமான ஒரு கட்சி மற்றும் அமனா இஸ்லாமியர்களின் சமய சார்ந்த ஓர் கட்சியாகவே இருகின்றது. எது எப்படியாயினும் பக்காதான் ஹாராப்பானின் கொள்கை முடிவுகளை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட பிறகே இதன் கூட்டணி உருவாக்கப்பட்டது அதனால் பொது மக்கள் அச்சமோ களங்கமோ கொள்ள தேவையில்லை.

ஹிண்ட்ராபும் நியுஜென் கட்சியும் பக்காதான் ஹாராபானுக்கு ஆதரவு தருகின்றனர் அவ்வளவுத்தான், வாட்சாப்பில் வருவது போல் வீண் வதந்திகளை நம்பாதீர் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

#வேந்தன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.