NATIONAL

பெர்சே: நாங்கள் மறுமலர்ச்சியை ஆதரிப்பவர்கள் !!!

7 மார்ச் 2018, 2:09 AM
பெர்சே: நாங்கள் மறுமலர்ச்சியை ஆதரிப்பவர்கள் !!!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7:

பெர்சே 2.0 தலைவர் மாரியா சின் அப்துல்லா அரசியலில் இறங்கியது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பெர்சே நடுநிலையானவர்கள் இல்லை, மாறாக மறுமலர்ச்சி சிந்தனை கொண்டவர்கள்" என்று பெர்சே இயக்கத்தின் துணைத் தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி கூறினார். மறுமலர்ச்சி சிந்தனை கொண்ட எந்த தரப்பினரிடமும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈடுபட தயாராக உள்ளதாக கூறினார்.

"  பெர்சே அமைப்பு அரசியல் சாராத ஒரு இயக்கம். ஆனாலும் , ஜனநாயக மறுமலர்ச்சியை ஆதரிக்கும் எந்த தரப்பினர் உடனும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். எல்லா நேரங்களிலும், அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம். ஆனாலும், சில அரசியல் கட்சிகள், மறுமலர்ச்சி கொள்கையை விரும்பாமல் புறக்கணித்தனர்," என்று விவரித்தார். இந்த விடயத்தில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சிறந்த முறையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.

#தமிழ் பிரியன்

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.