NATIONAL

மும்முணைப் போட்டியை எதிர்க்கொள்ள பாக்காத்தானுக்கு வியூகம் உள்ளது !!!

2 மார்ச் 2018, 3:07 AM
மும்முணைப் போட்டியை எதிர்க்கொள்ள பாக்காத்தானுக்கு வியூகம் உள்ளது !!!
மும்முணைப் போட்டியை எதிர்க்கொள்ள பாக்காத்தானுக்கு வியூகம் உள்ளது !!!

ஷா ஆலம், மார்ச் 2:

14-வது பொது தேர்தலில் மும்முணைப் போட்டியை எதிர் கொள்ள பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு தனி வியூகம் இருக்கிறது என்று கூட்டணியின் அமைப்பு செயலாளர் டத்தோ சைப்பூஃடின் அப்துல்லா கூறினார். தற்போதைய நமது நாட்டின் அரசியல்  சூழ்நிலையில் எந்த ஒரு முடிவையும் எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார்.

"  பாக்காத்தான் ஹாராப்பான்-தேசிய முன்னணி-பாஸ் ஆகிய மூன்று கூட்டணிகளிடையே மும்முணைப் போட்டி நிலவும். நான் இங்கு எல்லா விவரங்களையும் சொல்ல முடியாது. ஏனெனில், இதில் எங்களின் வியூகம் அடங்கி இருக்கிறது," என்று 14-வது பொது தேர்தலில் மக்களிடையே பயப்படும் கலாச்சாரத்தை எதிர் கொள்ளும் வழிமுறை எனும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார்.

 

 

 

 

 

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவர் மாரியா சின் அப்துல்லா கூறுகையில், எதிர் வரும் 14-வது பொது தேர்தலில் 90% வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.