SELANGOR

டத்தோ ஏரிஃக் ஷீ டூ மற்றும் பைஃக்கா உசினுக்கும் பதிலடி

26 பிப்ரவரி 2018, 11:06 AM
டத்தோ ஏரிஃக் ஷீ டூ மற்றும் பைஃக்கா உசினுக்கும் பதிலடி
டத்தோ ஏரிஃக் ஷீ டூ மற்றும் பைஃக்கா உசினுக்கும் பதிலடி

சுபாங்,பிப்ரவரி 27:

ஈஜோக் நில விவகாரம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான வதந்திகளும் பொய்யுரைகளும் இன்னமும் தேசிய முன்னணியால் தொடர்ந்துக் கொண்டிருப்பது அவர்களின் இயலாமையின் வெளிபாடு என வழக்கறிஞரும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சிவராசா நினைவுறுத்தினார்.

அந்த நில விவகாரம் தொடர்பில் இன்னமும் அர்த்தமற்ற அறிக்கைகளையும் தகவல்களையும் வெளியிட்டு வரும் தேசிய முன்னணியின் தொடர்பு வியூக இயக்குநர் டத்தோ ஏரிஃக் ஷீ டூ-வும் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலீட் இப்ராஹிம்யின் செயலாளர் பைஃக்கா உசின் ஆகியோருக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்போது அவர்கள் இது தொடர்பில் தனது வழக்கறிஞர் அலுவலகம் தவறு செய்திருப்பது பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முனைந்து வருகிறார்க.ஆனால்,அவர்கள் தவறான ஒன்றை கையாள முன் வந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

பாதிக்கப்பட்ட 980 மக்களை பிரதிநிதிக்க எனது வழக்கறிஞர் நிறுவனத்தை சிலாங்கூர் மாநில அரசு நிர்ணயம் செய்தது என கூறுவது துளியும் உண்மையில்லை.பாதிக்கப்பட்ட மக்கள் தான் என் நிறுவனத்தை நியமித்தனர்.இதில் மாநில அரசிற்கு துளியும் சம்மதமில்லை என்றும் சிவராசா குறிப்பிட்டார்.

இதில் ஷீ டூ பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக விளக்கம் பெறலாம்,யார் எனது நிறுவனத்தை நியமித்தது என்று.மாநில அரசா அல்லது மக்களா என்று.அச்சந்திப்பினை ஏற்பாடு செய்யவும் தாம் தயார் என்றார் சிவராசா.

இதற்கிடையில், பைஃக்கா  இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாகவே பேசுகிறார்.சம்மதப்பட்ட அவ்விரு நில மேம்பாட்டு நிறுவனமும் அதன் சொந்த வழக்கறிஞர் நிறுவனத்தை கொண்டிருக்கும் நிலையில் எனது வழக்கறிஞர் நிறுவனமும் இதில் சம்மதப்பட்டிருப்பதாக கூறுவது வேடிக்கையானது.எனது நிறுவனம் 980 குடியேற்றவாசிகளை மட்டுமே பிரதிநிதிக்கிறது என்று நினைவுறுத்தினார்.அவர்களின் நலனுக்கே எனது வழக்கறிஞர் நிறுவனம் செயல்படும் என்றார்.

மேலும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்கவும் ஒவ்வொருவருக்கும் நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதும்தான் எனது வழக்கறிஞர் நிறுவனத்தின் செயல்பாடு என்றும் குறிப்பிட்டார்.பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதே தனது நிறுவனத்தின் கடமை என்றும் கூறினார்.

இதற்கிடையில்,அவ்விருவரும் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தாம் சட்ட ஆலோசனையை மேற்கொண்டு வருவதாகவும் கூறிய சிவராசா அவ்விருவரும் அம்னோ தேசிய முன்னணியால் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு எதிராக செயல்பட நியமிக்கப்பட்ட கைகூலிகள் என்றார்.

இந்த ஈஜோக் நில விவகாரம் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்துக் கொண்டிருக்கும் அவலம்.இதற்கு யார் காரணியம் என்பதை மக்கள் நன்கு அறிவர்.அம்னோ தேசிய முன்னணியின் இம்மாதிரியான பொய்யுரைகளும் வதந்திகளும் மக்களிடையே எடுப்படாது என்றும் நினைவுறுத்திய சிவராசா நடப்பியல் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத அம்னோ தேசிய முன்னணி தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யுரைகளை வீசி வருவதாகவும் நினைவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.