ஷா ஆலம், பிப்ரவரி 25:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாபியி, தாம் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிமை தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்ததாக பைஃக்கா ஹூசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையில்லை என்று தெரிவித்தார். மாறாக ஈஜோக் நிலக் குடியேறிகளின் பிரச்சினை தொடர்பில் பைஃக்காவே சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியை குறை கூறி வருகிறார் என்றார். முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான பைஃக்காவின் அறிக்கையில் அடிப்படை மற்றுமல்ல அவதூறு ஆகும் என்று விவரித்தார் .
" நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்யவில்லை. அப்படி தனி மனிதனை தாக்குதல் நடத்தும் செயலை அரங்கேற்றி வருவது பைஃக்கா மட்டுமே. அஸ்மின் அலியை நேரிடையாக விமர்சனம் செய்துள்ளார் பைஃக்கா. நான் எந்த டிவிட்டரிலும் காலிட் இப்ராஹிமை குறை கூறியதில்லை. மாறாக அவரின் செயல்பாடுகளை புகழ்ந்திருக்கிறேன். ஆனால், மாநில அரசாங்கத்திற்கு பாதகமாக இருந்தால்தான், சில சமயங்களில் நான் குறை கூறி இருக்கிறேன்," என்று சிலாங்கூர் இன்றுக்கு சுஹாய்மி ஷாபியி தெரிவித்தார்.

மேலும் கூறுகையில் நன்னெறியற்ற செயல்கள் மூலம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை வீழ்த்தவும் தேசிய முன்னணியின் ஏஜெண்டுகளாக செயல்படும் காலிட் இப்ராஹிம் மற்றும் பைஃக்காவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
" நான் ஆவணங்கள் அடிப்படையில் செயல்பட்டு வருகிறேன். என்னை பொறுத்தவரையில் அவரின் காலம் முடிந்து விட்டது. தேசிய முன்னணியின் கைப்பாவையாக செயல்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்," என்று விவரித்தார்.
மேலும், இந்த விடயத்தை பொறுத்தவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆக மற்ற முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துமாறு சம்பந்தப் பட்டவர்களை சுஹாய்மி ஷாபியி கேட்டுக் கொண்டார்.


