NATIONAL

இலவச பிளாஸ்டிக் பைகள்: சமூக வலைத்தளங்களில் நையாண்டி மற்றும் நகைச்சுவை !!!

23 பிப்ரவரி 2018, 9:26 AM
இலவச பிளாஸ்டிக் பைகள்: சமூக வலைத்தளங்களில் நையாண்டி மற்றும் நகைச்சுவை !!!

ஷா ஆலம், பிப்ரவரி 23:

சிலாங்கூர் அம்னோ தேசிய முன்னணி எதிர் வரும் 14-வது  பொதுத் தேர்தலில் சிலாங்கூரை கைப்பற்றினால் இலவச பிளாஸ்டிக் பைகள் வழங்குவோம் என்று அறிவித்த செய்தியை சமூக வலைத் தள பதிவாளர்கள் நையாண்டி மற்றும் நகைச்சுவை உணர்வோடு பகிர்ந்து கொண்டனர்.

பெரும்பாலும் சமூக வலைத் தளத்தில் அம்னோ தேசிய முன்னணி முன்வைத்த இலவச பிளாஸ்டிக் பைகள் வழங்கும் திட்டம் அனைவரின் கேலியும் கிண்டலுக்கும் ஆளாக்கியது. இது மாநில மக்களுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்காது என்று கேலி செய்தனர் .

"  பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி இலவச நீர், இணையம், பேருந்து, பெடுலி சேஹாட் சுகாதார அட்டை மற்றும் கீஸ் அட்டை வழங்குகிறது. அம்னோ தேசிய முன்னணி இலவச பிளாஸ்டிக் பை வழங்குவது வேண்டுமா ? வேண்டாமா? என்று அஸ்லினா அட்னன் பதிவு செய்திருந்தார்.

மற்றொரு சமூக வலைத்தள பதிவாளர் பைஃசால் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், டான்ஸ்ரீ நோ ஓமார் மற்றும் தேசிய முன்னணி தலைவர்கள் பிளாஸ்டிக் பைகள் ஏந்திக் கொண்டு இருக்கும் படத்தை பதிவேற்றம் செய்தார்.

மிஸ்டர்ஸேக் அப்துல் அமீட், அம்னோ தேசிய முன்னணி முன்வைத்த திட்டம் கேலிக்கூத்தாக உள்ளது என்றார் .

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.