SELANGOR

ஈஜோக் நில குடியேறிகளுக்கு ரிம 180,000 இழப்பீடு & ரிம 400,000 மதிப்பிலான வீடு !!!

16 பிப்ரவரி 2018, 3:03 AM
ஈஜோக் நில குடியேறிகளுக்கு ரிம 180,000 இழப்பீடு & ரிம 400,000 மதிப்பிலான வீடு !!!
ஈஜோக் நில குடியேறிகளுக்கு ரிம 180,000 இழப்பீடு & ரிம 400,000 மதிப்பிலான வீடு !!!

ஷா ஆலம், பிப்ரவரி 16:

ஈஜோக் நிலக் குடியேறிகளின் 18 ஆண்டு காலமாக பட்ட துன்பங்களை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தீர்த்து வைத்தது. சிலாங்கூர் மாநில அரசு குடியேறிகளுக்கு இழப்பீடாக ரிம 180,000 மற்றும் ரிம 400,000 மதிப்பிலான வீடும் கொடுத்து தேசிய முன்னணி காலத்தில் இருந்து வந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அலுவலகத்தின் தொடர்பு வியூக இயக்குனர் இன் ஷாவ் லூங் கூறினார். ஈஜோக் நிலக் குடியேறிகளின் நன்மையை கருத்தில் கொண்டு மந்திரி பெசார் தலையிட்டு தீர்வு கண்டது குறிப்பிடத்தக்கது.

"   ஈஜோக் நிலக் குடியேறிகளின் பிரச்சினை தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போது ஆரம்பித்தது. இந்த மக்களுக்கு 18 ஆண்டுகள் கழித்து நீதி கிடைத்திருக்கிறது. உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் இந்த நிலங்கள் சம்பந்தப் பட்ட குடியேறிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் செயல்படும் மாநில அரசாங்கம், நிலங்களின் உரிமையாளர்களான இரண்டு நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன்களை வழங்க நேரிட்டாலும், தீர்வு காண வேண்டும் என்று முடிவெடுத்தது," என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

ஷாவ் லூங் மேலும் கூறுகையில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் பரிவுமிக்க கொள்கைகளின் அடிப்படையில் அஸ்மின் அலி தீர்வு கண்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.