NATIONAL

இனத்துவாத சித்தாந்தங்களை மறந்து, ஒருமைப்பாட்டை வளர்த்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்!!!

14 பிப்ரவரி 2018, 2:01 AM
இனத்துவாத சித்தாந்தங்களை மறந்து, ஒருமைப்பாட்டை வளர்த்து மாற்றத்தை ஏற்படுத்துவோம்!!!

ஷா ஆலம், பிப்ரவரி 14:

இனத்துவாத சித்தாந்தங்களை மறந்து ஒருமைப்பாட்டை வளர்த்து  மலேசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து மக்களும் பாடுபட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ சைப்பூஃடின் நாசூத்தியோன் கூறினார். நாட்டு மக்கள் சில பொறுப்பற்ற தரப்பினரின் இனத்துவாத சித்தாந்தங்களை பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இனங்களுக்கிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தி நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படாமல் தடுக்க செய்யும் முயற்சி எடுத்து வருகின்றனர் என்றார்.

"   ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் அம்னோ தேசிய முன்னணி மலேசிய மக்களிடம் இனவெறியை தூண்டுகிறது. இதற்கு சாதகமாக தங்களின் கைவசம் உள்ளன தகவல் ஊடகங்களை பயன்படுத்தி ஒற்றுமை உணர்வுகளை சீர்குலைத்து வருகிறது. இதன் அடிப்படையில், நாட்டு மக்கள் இது போன்ற இனம், மதம் மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களை சார்ந்த செய்திகளை நம்ப வேண்டாம். அனைத்து இனங்களிடையே ஏற்பட்டிருக்கும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க சதியாகும். இது போன்ற முயற்சிகளுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் தொடர்ந்து ஒருவரை ஒருவர் மதித்து, ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்," என்று சீனப் பெருநாளுக்கான வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.