SELANGOR

ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர், 200 இந்தியர்களுடன் பொங்கலை கொண்டாடினார்!!!

12 பிப்ரவரி 2018, 3:12 AM
ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர், 200 இந்தியர்களுடன் பொங்கலை கொண்டாடினார்!!!

ஷா ஆலம், பிப்ரவரி 12:

ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி ஏறக்குறைய 200 இந்திய சமுதாயத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடினார். தாமான்  ஸ்ரீ மூடா, அஸாலியா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வீடமைப்பு பகுதியில் உள்ள மக்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்த பொங்கல் திருநாள் நிகழ்ச்சி என்று பெருமிதத்துடன் கூறினார்.

"   ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இடங்களில் பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றேன். ஸ்ரீ மூடா சட்ட மன்றத்தின் கீழ் வசிக்கும் வாக்காளர்களுடன் களம் இறங்கும் ஒரு வாய்ப்பாக நான் நம்புகிறேன். இதன் வழி மக்களின் பிரச்சினைகளை கேட்க முடிகிறது. குறிப்பாக, இந்தியர்கள் எதிர் நோக்கும் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வழி வகுக்கிறது," என்று தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த வீடமைப்பு பகுதியில், 70% மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைத்து விட்டதாக சுஹாய்மி தெரிவித்தார். பள்ளிவாசல், சந்தை, வெள்ளம் மற்றும் குற்றச் செயல் எண்ணிக்கை போன்ற பிரச்சனைகளை தீர்த்து விட்டது தனது இரண்டாவது தவணையில் அடைந்த வெற்றி என்று மகிழ்ச்சியுடன் சிலாங்கூர் இன்றுக்கு  தெரிவித்தார்.

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளராக இருந்தாலும் மக்களுக்காக நேரிடையாக களம் இறங்கி சேவை ஆற்றி வரும் சட்ட மன்ற உறுப்பினரான சுஹாய்மி ஷாபியி, தமது சட்ட மன்றத்தில் பிரச்சனைகளை எதிர் நோக்கும் மக்கள் தனது கவனத்திற்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். தமது சட்ட மன்ற அலுவலகம் எந்த நேரத்திலும் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக உறுதியாக கூறினார்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.