ஷா ஆலம், பிப்ரவரி 11:
ஸ்ரீ மூடா சட்ட மன்றத்தில் 240 தாய்மார்களுக்கு அன்புத் தாய் விவேக சிலாங்கூர் (கீஸ்) அட்டைகளை வழங்கப்பட்டதாக ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி கூறினார். இது முதலாம் கட்ட கீஸ் அட்டை விநியோகம் என்று அவர் தெரிவித்தார்.
" இந்த கீஸ் அட்டைகளை பெறும் குடும்பங்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கீஸ் அட்டை பெறுபவர்கள் தங்களின் வாழ்க்கை செலவினங்களை குறைக்க வழி வகுக்கும்," என்று செக்சன் 27, ஷா ஆலம் சென்டாவான் மண்டபத்தில் நடைபெற்ற கீஸ் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் விவரித்தார்.

சுஹாய்மி மேலும் பேசுகையில், தனது சட்ட மன்ற அலுவலகம் 500 விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினாலும், 240 அட்டைகள் மட்டுமே வெளியாக்கப் பட்டுள்ளது.

கீஸ் அட்டையை பெற்றுக் கொண்ட பி.தங்கம் (வயது 55) கூறுகையில், இந்த அட்டையை அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்தப் போவதாக கூறினார்.
" இந்த கீஸ் அட்டை திட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இது எனது குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்க முடியும். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பணக் கஷ்டம் ஏற்படுகிறது. கீஸ் அட்டை திட்டத்தின் மூலம் இது கண்டிப்பாக குறைக்க முடியும்," என்று தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் கீஸ் அட்டை திட்டத்திற்கு ரிம 72 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது. மாதந்தோறும் ரிம 200 வீதம், வருடத்திற்கு ரிம 2400 மதிப்பிலான உணவு பொருட்களை பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடி மற்றும் கடைகளில் வாங்கி கொள்ளலாம் என்று மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளருமான சுஹாய்மி ஷாபியி கூறினார்.
#கு. குணசேகரன்


