SELANGOR

இனங்களிடையே ஒருமைப்பாடு- சிலாங்கூரின் வரப்பிரசாதம்

3 பிப்ரவரி 2018, 11:23 PM
இனங்களிடையே ஒருமைப்பாடு- சிலாங்கூரின் வரப்பிரசாதம்
இனங்களிடையே ஒருமைப்பாடு- சிலாங்கூரின் வரப்பிரசாதம்

பூச்சோங், பிப்ரவரி 4:

சிலாங்கூர் மாநில பல்லின மக்களின் ஒருமைப்பாடு, இனங்களுக்கிடையே நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு சிறந்த அடித்தளமாக இருப்பது கண்டு பெருமிதம் கொள்வதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த கொள்கைகள் மூலம் எல்லா இனங்களை ஒன்று சேர்க்க முடிகிறது என்றார்.

"   சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்கள் இருப்பினும், இந்த வேற்றுமையே நமது ஒருமைப்பாட்டின் அடித்தளமாக அமைந்தது என்று நாம் தைரியமாக கூற முடியும். மக்களின் ஒருமித்த கருத்து மற்றும் முழுமூச்சான செயல்பாடுகள் மூலம் பொருளாதார துரித வளர்ச்சி அடைய ஆண்டவனின் அருள் நமக்கு கொடுக்கிறது. இதற்கு சான்றாக, பல்வேறு கோணங்களில் நம் மீது தாக்குதல் நடத்தினாலும், தகவல் ஊடகங்கள் சிலாங்கூர் தலைமைத்துவத்தின் மீது மாசு கற்பிக்கும் விதமாக செய்திகள் வெளியிட்டாலும், சிலாங்கூர் மாநிலம் மலேசியாவில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக தொடர்ந்து திகழ்கிறது," என்று பூச்சோங் நகரில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்  பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில்  பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

 

 

 

இந்நிகழ்ச்சியில் 5000-க்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டனர். சிலாங்கூர் மாநில தோட்டத் தொழிலாளர்கள், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சி குழு உறுப்பினர் கணபதி ராவ், கின்னாரா சட்ட மன்ற உறுப்பினர் எங் ஸி ஹான், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.