NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூரில் பாக்காத்தான் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடரும்

2 பிப்ரவரி 2018, 10:28 AM
மந்திரி பெசார்: சிலாங்கூரில் பாக்காத்தான் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடரும்
மந்திரி பெசார்: சிலாங்கூரில் பாக்காத்தான் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடரும்

ரவாங், பிப்ரவரி 2:

சிலாங்கூர் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகிறது எனவும் எதிர் வரும் 14-வது  பொதுத் தேர்தலுக்குள் முடிவு செய்யப் படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். நான்கு கூட்டணி உறுப்புக் கட்சிகளான கெஅடிலான், பெர்சத்து, ஜசெக மற்றும் அமானா ஆகிய பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சில முக்கிய அம்சங்கள் தீர்வு செய்யப்பட வேண்டியிருக்கிறது  என்று வலியுறுத்தினார்.

"   ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் சிறந்த முடிவை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 80% வரையில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகிறது. ஆனாலும், இன்னும் சில முக்கிய அம்சங்கள் தீர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது," என்று விவரித்தார்.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது எனவும் தொகுதிகள் பங்கீட்டில் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பு என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.