SUKANKINI

ஷா ஆலம் அரங்கம்: சிலாங்கூர் அரசாங்கமும், கால்பந்து சங்கமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

31 ஜனவரி 2018, 7:21 AM
ஷா ஆலம் அரங்கம்: சிலாங்கூர் அரசாங்கமும், கால்பந்து சங்கமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
ஷா ஆலம் அரங்கம்: சிலாங்கூர் அரசாங்கமும், கால்பந்து சங்கமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

ஷா ஆலம், ஜனவரி 31:

சிலாங்கூர் ரசிகர்கள் நடவடிக்கை குழு, 'ரேட் ஜயன்ட்'  ஷா ஆலம் அரங்கத்தை உபசரணை அரங்கமாக பயன்படுத்துவது தொடர்பில்  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தையும் மற்றும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்தையும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. நடவடிக்கை குழுவின் பேச்சாளரான முகமட் ஃபிர்டாவுஸ் அப்துல் முத்தாலிப் கூறுகையில் தமது தரப்பு நடுவராக இருக்கவும் தயாராக உள்ளதாக கூறினார். இதன் மூலம் மாநில அரசாங்கம் மற்றும் கால்பந்து சங்கத்தின் இடையே நடக்கும்  பேச்சுவார்த்தையில் எந்த ரகசியமும் இல்லாமல் இருப்பதை நடவடிக்கை குழு உறுதி செய்யும் என்றார்.

"  சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கம் ஆகிய இரண்டு தரப்பினரும்  அதிகாரப்பூர்வமாக சிலாங்கூர் கால்பந்து அணியின் நிர்வாகம் செய்யும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும். இதில் குறிப்பாக ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஷா ஆலம் அரங்கத்தை பயன்படுத்தும் வழியை காண வேண்டும். நாங்கள் எந்த தரப்பினரின் தவறுகளை சுட்டிக் காட்டவில்லை அல்லது எதிரிகளை சம்பாதிக்க முயற்சி செய்யவில்லை, மாறாக சிலாங்கூர் மாநில கால்பந்து அணியின் மீதான அக்கறையும் மற்றும் மாநில கால்பந்து விளையாட்டின்  எதிர் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு அவசரமாக எடுக்கப் பட்ட இறுதி நடவடிக்கை," என்று ஷா ஆலம் அரங்கத்தின் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

 

 

 

 

பிப்ரவரி 1-இல், காலை மணி 10-க்கு  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில், மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியிடம் தங்களின் கோரிக்கை மனுவை  சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.