SELANGOR

மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிலுக்கு அருகில் கடைகள் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

29 ஜனவரி 2018, 11:17 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிலுக்கு அருகில் கடைகள் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிலுக்கு அருகில் கடைகள் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

செலாயாங்,ஜனவரி 29:

அண்மையில் சில தினங்களாய் மாற்றுத்திறனாளிகளை செலாயாங் நகராண்மைக்கழகம் புறக்கணித்ததாக வெளியாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவர்கள் கேட்ட இடம் போலீஸ் பாதுகாப்பு கூடாரம் மற்றும் செயல்பாட்டு மையம் அமைத்திருப்பதால் அவ்விடத்திற்கு மாற்றாக தற்போது ஆலயத்தின் எதிர்புறத்திலேயே 6 இடங்களை வழங்கியது.

மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு வழங்கிய இடத்தை நிறைவோடு பெற்றுக் கொண்ட வேளையில் பிரன்சிஸ் சிவா மட்டும் வேறு இடங்களை ஏற்க மறுத்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வைரலாகி வந்த வேளையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் சிறப்பு அதிகாரி வசந்தக்குமார் ,வட்டார கவுன்சிலர்களான விக்னேஸ்வரன்,துரை ரத்னம் மற்றும் லெட்சுமணன் ஆகியோர் களமிறங்கினார்கள்.

பிரச்னையை கேட்டறிந்த செலாயாங் நகராண்மைக்கழக அமலாக்கப் பிரிவிம் துணை இயக்குநர் கெப்டன் ரசாக் சம்மதப்பட்ட பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோவிலின் எதிர்புறம் 6 இடங்களை ஒதுக்கிக் கொடுத்தார்.

மேலும்,மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கவோ அல்லது அவமதிக்கும் எண்ணமோ செலாயாங் நகராண்மைக் கழகத்திற்கு இல்லை.மாறாய்,அவர் கோரிக்கை வைத்த இடம் நமது அதிகாரத்திற்கு உட்பட்டதில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும் கவுன்சிலர் விக்னேஷ்வரன்  கூறினார். வீண் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். மக்களுக்கு சேவை செய்வதே எங்களின் நோக்கம் என்றார்.

இப்பிரச்னை தலைதூக்கியதும் இதற்கு தீர்வுகாண களமிறங்கிய வட்டார கவுன்சிலர்கள் உடனடியாக சம்மதப்பட்டவரை அணுகி உண்மை நிலவரத்தை எடுத்து சொல்லி புதிய இடத்திற்கு பரிந்துரை செய்தனர்.

அவர்கள் பரிந்துரை செய்த இடத்தை பிரன்சிஸ் சிவா ஏற்றுக் கொண்ட நிலை செலாயாங் நகராண்மைக்கழகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு பிரச்னைக்கும் தீர்வு கண்டனர். அவர்களோடு ஆட்சிக்குழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரியும் உடன் இருந்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டதால், இனியும் அதுதொடர்பிலான உண்மையற்ற தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து சர்ச்சையினை உருவாக்க வேண்டாம் என கவுன்சிலர்கள் மூவரும் கேட்டுக் கொண்டனர்.

மாநில அரசாங்கம் ஒருபோதும் இந்திய சமுதாயத்தையும் மாற்றுத்திறனாளிகள் உட்பட எந்தவொரு வர்க்கத்தையும் ஓரங்கட்டாது என்பதை நினைவுறுத்த விரும்புவதாக கூறிய அம்மூவரும் தைப்பூச திருநாளை மகிழ்வோடும் சமய சிந்தனையோடும் ஒன்றுப்பட்டு கொண்டாடுவோம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.