OLEH ERMIZI MUHAMAD
கோலா சிலாங்கூர், ஜனவரி 22:
சிலாங்கூர் மாநில சட்ட மன்ற மேம்பாட்டு நிதி ஒதுக்கீடுகள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் நேரிடையாக தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர அரண்மனையை சம்பந்தப்படுத்தக் கூடாது.
" சிலாங்கூர் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களின் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக மாவட்ட அதிகாரி அல்லது என்னிடம் நேரிடையாக விளக்கம் பெறலாம். இதற்காக சுல்தானிடம் செல்லத் தேவையில்லை," என்று பெர்மாத்தாங், தஞ்சோங் காராங் நடைபெற்ற கீஸ் அட்டையின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்ட மன்ற மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு தொடர்பாக உடனடி தீர்வு ஏற்படவில்லை என்றால் சிலாங்கூர் சுல்தானிடம் கொண்டு செல்லப் போவதாக செய்திகள் வெளியிட்டுள்ள நிலையில் அஸ்மின் அலி மேற்கண்டவாறு கூறினார். ஆனாலும், மாநிலத்தின் தலைமையக கஜானா ஒதுக்கீடுகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே காரணம் என்று தாம் நம்புவதாக கூறினார்.


