NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் ஆசிரியர்கள் சுதந்திரமாக வாக்களிக்கலாம்!!!

22 ஜனவரி 2018, 1:47 AM
14-வது பொதுத் தேர்தலில் ஆசிரியர்கள் சுதந்திரமாக வாக்களிக்கலாம்!!!
14-வது பொதுத் தேர்தலில் ஆசிரியர்கள் சுதந்திரமாக வாக்களிக்கலாம்!!!

ஷா ஆலம், ஜனவரி 22:

நாட்டை வழி நடத்தும் ஆற்றல் கொண்ட தலைவர்களை தேர்தலில் தேர்ந்தெடுக்க ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு அடித்தளமாக இருப்பது மட்டுமில்லாமல் எதிர் கால சந்ததியினரை உருவாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

"   ஆகவே, ஆசிரியர்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் சுய சிந்தனை கொண்டவர்கள். சுயமாக முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்கள். வாக்குரிமை உங்கள் கையில். நம்மை மிரட்டி கொண்டும், அவமானப்படுத்தி வரும் தரப்பினருக்கு பாடம் கற்பிப்போம்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ மஹாஸீர் காலிட், எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டிய செயலை மேற்கோள்காட்டி இப்படி கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.