NATIONAL

ஸூரைடா: சைபூலின் அறிக்கை, பாக்காத்தான் தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே ஆகும்!!!

5 ஜனவரி 2018, 2:25 AM
ஸூரைடா: சைபூலின் அறிக்கை, பாக்காத்தான் தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே ஆகும்!!!
ஸூரைடா: சைபூலின் அறிக்கை, பாக்காத்தான் தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே ஆகும்!!!

ஷா ஆலம், ஜனவரி 5:

சைபூல் புஹாரி, பிரதமர் பதவி  வேட்பாளராக டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியே சரியானவர் என்ற அறிக்கை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவத்தில் குழப்பம் ஏற்படுத்த முயலும் செயல் என கெஅடிலான் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் ஸூரைடா கமாரூடின் கூறினார். சைபூல் புஹாரி ஏற்கனவே கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தன்னை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தினார் என்று பொய்யுரைத்தவர் என்பதை சுட்டிக் காட்டினார். இதனால் அன்வார் இப்ராஹிம் செய்யாத குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது மறந்து விடாதீர்கள் என்று கூறினார். ஆகவே, சைபூல் போன்றவர்களின் அறிக்கைகளை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றார்.

"  ஓரினச் சேர்க்கை என்று பொய்யுரைத்தவரின் கூற்றை நாம் நம்பக்கூடாது. அன்வார் இப்ராஹிம் மற்றும் அஸ்மின் அலி ஆகிய இருவரிடையே மோதல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சைபூல் போன்றவர்கள் இறங்கி இருக்கிறார்கள். 14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆகவே பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவத்தில் மோதல்கள் ஏற்படுத்த பலர் கிளம்பி விட்டார்கள்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

ஸூரைடா மேலும் கூறுகையில், நாட்டில் அரசியல் அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய இளமையான பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த இளம் வேட்பாளர் அஸ்மின் அலியா என்ற கேள்விக்கு, அவரை தேர்வு செய்யலாம்," என்று விவரித்தார்.

#தமிழ் பிரியன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.