NATIONAL

வேலை நாள் எனும் காரணியம் ஏற்புடையதல்ல

3 ஜனவரி 2018, 4:15 AM
வேலை நாள் எனும் காரணியம் ஏற்புடையதல்ல

ஷா ஆலம், டிசம்பர் 2:

எல்லை சீரமைப்பிற்கு எதிரான விசாரணை செவிமடுப்பு தொடர்பில் "வேலை நாள்" எனும் காரணம் கோருவது ஏற்புடையதல்ல.அஃது அர்த்தமற்றது என கூறிய கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் ங் ஸ்ஷே ஹான் தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் முறையான நடைமுறையினை கடைபிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒவ்வொரு மறுப்பு பாரத்திலும் 100பேர் இருத்தல் வேண்டும் என்றும் அவற்றில் மூன்று பேச்சாளர்கள் இருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள நிலையில் இம்முறை தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒரு பேச்சாளர் அல்லது பிரதிநிதி மட்டுமே கடிதம் பெற்றிருப்பது தேர்தல் ஆணையம் முறையான நடைமுறைக்கு அப்பால் இயங்குவதாய் கூறினார்.

குறிப்பிட்டிருக்கும் மூன்று பிரதிநிதிகளும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை பெற்றிருக்க வேண்டிய சூழலில் வேலை நாள் என்பதால் ஒருவருக்கு மட்டுமே கடிதம் அனுப்பியதாய் தேர்தல் ஆணையம் கூறும் காரணம் அர்த்தமற்றது.அஃது ஏற்புடையதல்ல என்றார். இதற்கிடையில், எல்லை சீரமைப்பினால் கின்றாரா தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை பெரும் அளவில் மாற்றம் கண்டிருப்பதோடு கடந்த 13வது பொதுத் தேர்தலில் 35,000 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 63,000 ஆக உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.அதேவேளையில்,பூச்சோங் நாடாளுமன்றத்தை கொண்ட கின்றாரா சட்டமன்றம் சுபாங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்டதாகவும் அமைவதாக சுட்டிக்காண்பித்தார்.

இந்த எல்லை சீரமைப்பு என்பது நடுநிலையை கொண்டிருக்கவில்லை. ஒரு தரப்பிற்கு சாதகமான சூழலை அஃது உருவாக்கும் என சிலாங்கூர் மாநில தலைவர்கள் கோடிக்காட்டி வரும் நிலையில் அதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன ரீதியிலான எல்லை சீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.