SELANGOR

வணிகர்கள் 2018-இன் வியாபார உரிமங்களை புதுப்பிக்க வேண்டுகோள்!!!

22 டிசம்பர் 2017, 7:26 AM
வணிகர்கள் 2018-இன் வியாபார உரிமங்களை புதுப்பிக்க வேண்டுகோள்!!!

அம்பாங் ஜெயா, டிசம்பர் 22:

அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் கீழ் பதிவு பெற்ற வணிகர்கள் தங்களின் வியாபார உரிமங்களை எதிர் வரும் 2018 ஜனவரி 1-க்குள் புதுப்பிக்க தவறி விடாதீர்கள் என்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தலைவர் அப்துல் அமீட்ஹூசேன் நினைவுறித்தினார். தாமதமாக புதுப்பிக்கும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். வணிக உரிமங்களுக்கும் மற்றும் நாய் உரிமங்களுக்கும் , தொழிற்சாலை உரிமங்களுக்கு  அபராதமாக விதிக்கப்படும் என்று விவரித்தார்.

நகராண்மை கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது மேற்கண்டவாறு  கூறினார். இதுவரை 4,142 வணிகர்கள் வியாபார உரிமங்களை புதுப்பித்து விட்டனர். இதன் மூலம் மொத்த வசூல் ரிம 2,431,280.30 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் 6,225 வணிகர்கள் தங்களின் வியாபார உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை பின்பற்றவில்லை என்று அப்துல் அமீட் கூறினார்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.