SELANGOR

புறநகரில் நடமாடும் உணவுத்திட்டம், ஆட்சிக்குழு உறுப்பினர் பாராட்டு

19 டிசம்பர் 2017, 6:15 AM
புறநகரில் நடமாடும் உணவுத்திட்டம், ஆட்சிக்குழு உறுப்பினர் பாராட்டு

ஷா ஆலம், டிசம்பர் 20:

நடமாடும் உணவுத்திட்டத்தை புறநகர் பகுதிகளில் அறிமுகம் செய்வது நன் முயற்சி என்றும் அஃது இளம் தலைமுறைக்கு பெரும் வாய்ப்பு என்றும் மாநில இளைஞர் மேம்பாடு,விளையாட்டு,பண்பாடு மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அமிருடீன் ஷஹாரி பாராட்டினார்.

உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம் நடமாடும் உணவுத் திட்டமான "பூஃட் டிராக்" திட்டத்தை புறநகர் பகுதிகளில் அறிமுகம் செய்தது குறித்து மேலும் கருத்துரைத்த அவர் இதன் மூலம் இளம் தலைமுறை வர்த்தகர்களுக்கு ஆக்கப்பூர்வமான வருமானத்தையும் பொருளாதார மேம்பாட்டையும் அளிக்கும் என்றும் நம்பிக்கை அளித்தார்.

அதேவேளையில்,உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம் இத்திட்டத்திற்கு மிகவும் குறைந்த பெர்மிட் வாடகையை நிர்ணயம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறிய அவர் இதன் மூலம் அதிகமான இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்க முடியும் என்றும் கூறினார்.

வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அணுக்கமான உறவையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்கு உலுசிலாங்கூர் மாவட்டமன்றம் வெ.15 முதல் வருடத்திற்கு கட்டணமாய் விதித்திருப்பது மற்ற ஊராட்சி மன்றங்களோடு ஒப்பிடுகையில் அஃது பன்மடங்கு குறைவு என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,அம்மாவட்ட மன்றத்தின் லைசன்ஸ் பிரிவு தலைமை அதிகாரி கமாருல்ஷாமான் அப்துல் ரஹ்மான் மாநில அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதும் அஃது மக்களிடையே நன் முறையில் கொண்டு சேர்ப்பதும் ஊராட்சி மன்றங்களின் பெரும் பங்காகும்.அவ்வகையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் இதனை உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம் முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் சுற்றுச் சூழலின் தூய்மை பாதுகாக்கப் படுவதோடு இஃது ஓர் விவேகமான வர்த்தக திட்டமும் கூட என்றும் கூறினார்.

அதுமட்டுமின்றி,இந்த விவேகமான திட்டத்தின் கீழ் அதிகபட்சமான வருமானத்தை ஈட்டவும் அஃது வழிகோலுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலுசிலாங்கூர் மாவட்ட மன்றத்தில் பூஃட் டிராக் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்த போது அவ்விருவரும் இவ்வாறு குறிப்பிட்டனர்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.