SELANGOR

யு.பி.எஸ்.ஆர்.தேர்வில் தேர்ச்சி பெற்ற 110 மாணவர்களுக்கு பாராட்டு

15 டிசம்பர் 2017, 2:24 AM
யு.பி.எஸ்.ஆர்.தேர்வில் தேர்ச்சி பெற்ற 110 மாணவர்களுக்கு பாராட்டு

ஷா ஆலம், டிசம்பர் 15:

யு.பி.எஸ்.ஆர் தேர்வில் ஆரம்பப் பள்ளிகள் மற்றும் சமயப் பள்ளிகளை சார்ந்த 110 மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

சிறப்பிக்கப்பட்ட 110 மாணவர்களும் அத்தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற செலாட் கிள்ளான் சட்டமன்ற தொகுதியை சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிள்ளான் நகராண்மைக் கழக மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஹலிமா இந்நிகழ்வு சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் அரும் நிகழ்வு என்று குறிப்பிட்டார்.

மேலும்,இம்மாணவர்களின் சாதனை இடைநிலைப்பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தொடர வேண்டும் என வாழ்த்திய டாக்டர் ஹலிமா அதற்கு பெற்றோர்கள் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் அஃது பெற்றோர்களின் பெரும் கடமை என்றும் நினைவுறுத்தினார்.

பள்ளிப்பருவத்தின் தொடக்கமாக விளங்கிடும் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்து விளங்கிடும் மாணவர்கள் இடைநிலைப்பள்ளியிலும் சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் கல்வி கற்றால் மட்டுமே உலகில் சிறந்த இலக்கை எட்ட முடியும் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் நூர் ஷயாஷானி செலாட் கிள்ளான் சட்டமன்ற தொகுதியில்

சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவியாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.