NATIONAL

தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம்! தமிழ்க்கல்வியை மீட்போம்..!!

10 டிசம்பர் 2017, 1:40 PM
தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம்!  தமிழ்க்கல்வியை மீட்போம்..!!

புத்ராஜெயா, டிசம்பர் 10:

தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் மலேசிய நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் மக்கள், தமிழ்ப்பள்ளிகள் தங்கள் உரிமை என்பது மட்டுமில்லாமல் தமிழ்ப்பள்ளிகள் நமது கடமை என்பதை உணர வேண்டும்.

இதனை மக்களிடம் சேர்க்கும் வகையில், தோழர் தியாகு, தோழர் அஞ்சாத்தமிழன் ஜோகூர் -  புத்ராஜெயா *நடைபயணத்தை* மேற்கொண்டுள்ளார்கள். வெயிலிலும், மழையிலும் நடந்து சென்று, சாலை ஓரங்களில் உறங்கி, செல்லும் இடங்களில் பொது மக்களைச் சந்தித்து, தமிழ்ப்பள்ளிகள் குறித்து பல கருத்துகளைக் கலந்துரையாடி வருகிறார்கள். 25 நவம்பர் தொடங்கிய இவர்களின் நடைப்பயணம் எதிர்வரும் திங்கட்கிழமை 11/12/2017 (சிலாங்கூர் விடுமுறை), காலை 9 மணி அளவில், டத்தாரான் புத்ரா, புத்ராஜெயாவில் முடிவுறும்.

மக்களோடு கலந்துரையாடி பேசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மனு ஒன்று தயாரிக்கப்பட்டு, பிரதமரிடம் அன்று வழங்கப்படும். ஆக, தமிழ்ப்பள்ளிகளைக் காக்க மக்கள் அனைவரும் புத்ராஜெயாவில்  அணி திரள்வோம்!

இதனை உங்கள் நண்பரோடு பகிருங்கள்!

தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம்…!

தமிழ்க்கல்வியை மீட்போம்…!!

#தமிழ் அரசன்

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.