கோம்பாக், டிசம்பர் 8:
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருமான நிதி வெ.2.55 பில்லியனாக இருந்த போதிலும் அஃத இலக்கை கடந்து கடந்த நவம்பர் 28ஆம் தேதியோடு மாநில அரசாங்கத்தின் வரி வசூல் வருமானம் வெ.2.65 பில்லியனை எட்டியிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பெருமிதமாக கூறினார்.
வரையறுக்கப்பட்ட காலகட்டம் முடிவுறுவதற்கு இன்னும் ஓர் மாதம் இருக்கும் நிலையில் வரி வசூல் அஃத இலக்கினை தாண்டி மாநில அரசின் வருமானமாய் உயர்ந்திருப்பது மாநில அரசாங்கத்தின் விவேகத்தை காட்டுவதாக கூறிய அவர் இவ்வாண்டு முடிவதற்கு வரி வசூலின் வருமானம் 81.7 விழுகாட்டினை எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இஃது நில பிரியம் 54.2 விழுகாடும்,நில வரி தொடர்பில் 19.5 விழுகாடும் மற்றும் இதர நிலம் தொடர்பிலான விவகாரங்களுக்கு 8.0 விழுகாடும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளையில்,நிரந்திர முதலீட்டு வருமானத்தின் மூலம் 32.2 விழுகாடும், கேளிக்கைகள் வரியின் மூலம் 2.2 விழுகாடும் மற்றும் காடு மற்றும் குவாரி வரிகள் மூலம் 1.9 விழுகாடும் மாநில அரசாங்கத்தின் வருமான மேம்பாடுகளுக்கு பெரும் பங்காற்றும் என்றும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டுகான காலவரைவு முடிவதற்கு முன்னரே மாநில அரசாங்கம் அதன் இலக்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் 2018ஆம் ஆண்டுகான மாநில பட்ஜெட் தாக்கலின் போது அவர் கூறினார்.
#தமிழ் அரசன்


