NATIONAL

இன்னுமா நீ தமிழ் பள்ளிகளுக்கு திரும்பவில்லை?

1 டிசம்பர் 2017, 4:39 AM
இன்னுமா நீ தமிழ் பள்ளிகளுக்கு திரும்பவில்லை?

"இந்த மலேசிய தமிழ் பிள்ளைகள் நடப்பதால், தமிழ் தாயிக்கு இதயம் வலிக்கிறது, இன்னுமா நீ தமிழ் பள்ளிகளுக்கு திரும்பவில்லை?"

கோழிக் கூடுகளில், திண்ணைகளில் படுத்துறங்கி, வழியில் கிடைக்கும் உணவை வாங்கியுண்று, கால் வலியையும், உடல் சோர்வையும் புறந்தள்ளி, தமிழ் தாயிக்கு மொழி, சொல் வலி நிகழாமல் தடுக்க, தொல்காப்பியன், சேரன் செங்குட்டுவன், கடுங்கோன் பாண்டியன், இராச இராச சோழன், பண்டார வன்னியன், உவேசு ஐயன், பாண்டித்துரைத் தேவர், தேவநேயன், மறைமலை அடிகள், காமராசர், சேவியர் தனிநாயகம் (ஈழம்) அடிகள், வேலுப்பிள்ளை பிரபாகரன், இ.மயூரநாதன் (ஈழம்),

போன்ற, இன்னும் எண்ணிலடங்காதோர் பலர் காவலுக்கு நின்று வளர்த்த தமிழை இனிமேலும் அழிந்திடல் கூடாதென்று,

தாயகத்திலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், மலேசிய தெருக்களில் தமிழ்க் காக்க வளர்க்க உலக தமிழினம் பெயரறிய சில இளைஞர்கள் நெடும் பயணமாய் நடக்கிறார்கள்.

இவர்கள் நடக்க, நாமும் வேடிக்கை பார்க்க என, பொழுதுகள் கடந்த பின்னர் மறந்து போவதற்காக அவர்கள் நடக்கவில்லை, அவர்கள் நடப்பதால் அவர்களின் கால்கள் தானே வலிக்கும், என்றால்,

அது மடத்தனம், தமிழ் தாயிக்கு நிச்சயம் இதயமே வலிக்கும்!

ஆகவே இருமொழி கல்வி திட்டமான DLP வேண்டாம், மேலும் உலகத் தமிழர் அனைவரும் தாய்மொழித் தமிழ் கல்விக்கு திரும்புவோம்.

தமிழ் காப்போம்!

தமிழக தமிழ் உணர்வாளர் திரு.பழனிகுமார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.