SELANGOR

விபத்தினால் பாதிக்கப்பட்டு வரும் தேவராஜுக்கு உதவிக்கரம்

29 நவம்பர் 2017, 3:15 PM
விபத்தினால் பாதிக்கப்பட்டு வரும் தேவராஜுக்கு உதவிக்கரம்
விபத்தினால் பாதிக்கப்பட்டு வரும் தேவராஜுக்கு உதவிக்கரம்

ஷா ஆலம், நவம்பர் 29:

கடந்த இரண்டாண்டுகளாக விபத்தினால் பாதிக்கப்பட்டு உடற்பேறு குறைந்து தனது மாத வருமானத்தை இழந்து திரு தேவராஜ் அவர்கள் அவதியுற்று வருகிறார். 6 குழுந்தைகளின் செலவினங்களை சமாளிக்க அவரது மனைவி மாதவி பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இருப்பினும் அவரது குறைந்த மாத வருமானம் பள்ளி பயிலும் குழந்தைகள் செலவினம், மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கணவரின் செலவினம்,வீடு வாடகை மற்றும் உணவு ஆகிய அடிப்படைக்கே பற்றாக்குறையாக உள்ளது.

இந்த தகவலை அறிந்த கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி திரு எஸ் பி சரவணன் அவர்களை நேரில் சென்று கண்டறிந்து சிறிது உதவி பொருட்களை வழங்கினார். போதுமான வருமானமின்றி கணவரின் மருத்துவ சிகிச்சைக்கே பண சிக்கல்களை எதிர்நோக்கும் இந்த குடும்பத்தினருக்கு நாம் நம்மால் இயன்ற உதவியினை செய்வோம்.

அவரது குழந்தைகள் அடுத்த ஆண்டும் கல்வி தொடர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு உங்களால் முடிந்த நிதியினை வழங்கவும். நன்றி.

169981040620( Maybank) Devaraj a/l segaran

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.