ANTARABANGSA

ஏர் ஆசியா பாலி மற்றும் லொம்போக் ஆகிய இடங்களுக்கான பயணங்களை ரத்து செய்தது

27 நவம்பர் 2017, 4:28 AM
ஏர் ஆசியா பாலி மற்றும் லொம்போக் ஆகிய இடங்களுக்கான பயணங்களை ரத்து செய்தது
ஏர் ஆசியா பாலி மற்றும் லொம்போக் ஆகிய இடங்களுக்கான பயணங்களை ரத்து செய்தது

கோலா லம்பூர், நவம்பர் 27:

குறைந்த விலை பயண நிறுவனமான ஏர் ஆசியா தனது பாலி மற்றும் லொம்போக் ஆகிய இடங்களுக்கு செல்லும் 32 விமான பயணங்களை ரத்து செய்தது. மேலும் இரண்டு பயணங்களை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாலியில் அமைந்துள்ள அகோங் மலையின் வெடிப்பின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நேற்று தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, பயண நிலவரம் மற்றும் தற்போதைய சூழ்நிலை போன்றவை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில், ரத்து செய்யப்பட்ட விமானப் பயணிகள் தங்களின் மறு பயண திகதிகளை 30 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம். இதில் எந்த ஒரு கட்டணமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

மேலும் தகவலுக்கு தங்களின் இணையதளத்தில் www.airasia.com

பெற்றுக் கொள்ளவும் என்று ஏர் ஆசியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.