NATIONAL

கெஅடிலான்: அம்னோ-பிஎன்-இன் தகவல் ஊடகங்கள் வழி பரப்புரை, மக்களிடம் எடுபடாது!!!

25 நவம்பர் 2017, 11:40 PM
கெஅடிலான்: அம்னோ-பிஎன்-இன் தகவல் ஊடகங்கள் வழி பரப்புரை, மக்களிடம் எடுபடாது!!!
கெஅடிலான்: அம்னோ-பிஎன்-இன் தகவல் ஊடகங்கள் வழி பரப்புரை, மக்களிடம் எடுபடாது!!!

ஜோகூர், நவம்பர் 26:

அம்னோ தேசிய முன்னணி கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் ஊடகங்கள் வழி பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தலைமைத்துவத்தை தரக்குறைவாக  பறைசாற்றும் நடவடிக்கை பொது மக்களிடம் எடுபடாது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இதிலும் குறிப்பாக இளைஞர்கள் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின் அலி அறிவித்தார்.

"  நம் நாட்டு மக்கள் தகவல் ஊடகங்கள் தேசிய முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். இதிலும் இளையோர், அனைவரும் சமூக வலைத் தளத்தில் பல்வேறு தகவல்களை அறிந்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, அவர்கள் தேசிய முன்னணியின் தகவல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் உண்மையா அல்லது பொய்யான தகவல்களா என சீர்தூக்கி பார்க்க முடியும். இளையோரின் வாக்குகள் கண்டிப்பாக அடுத்த பொதுத் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வரும்," என்று தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றது கெஅடிலான் கட்சியின் சூறாவளி பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

 

 

 

மேலும் பேசுகையில், இந்த தகவல் ஊடகங்கள் கெஅடிலான் கட்சியை மிகவும் தரம் குறைத்து மதிப்பிட்டு வருகின்றனர் என்று அஸ்மின் அலி கூறினார். அதே வேளையில், தனது பலவீனத்தை மறைக்க பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைத்துவத்தை தாக்கல் செய்த வண்ணம் உள்ளன என்பதை அஸ்மின் அலி சுட்டிக்காட்டினார்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.