NATIONAL

பாக்காத்தான் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்ற குறி வைத்துள்ளது

25 நவம்பர் 2017, 11:36 PM
பாக்காத்தான் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்ற குறி வைத்துள்ளது
பாக்காத்தான் ஜோகூர் மாநிலத்தை கைப்பற்ற குறி வைத்துள்ளது

ஜோகூர், நவம்பர் 26:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியின் வசம் உள்ள ஜோகூர் மாநிலத்தை கைப்பற்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி உத்தேசித்துள்ளது என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தார். கெஅடிலான், ஜசெக, அமானா மற்றும் பெர்சத்து கூட்டணி கட்சிகளின் பலத்தை ஒருங்கிணைத்து மாநில மக்களின் ஆதரவை பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

"  நமது கவனம் ஜோகூர் பாரூ மட்டும் இல்லை, மாறாக ஜோகூர் மாநிலத்தை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் முன்னணி மாநிலமாக தற்போது இருந்து வருகிறது. இன்று ஜோகூர் மாநில மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர். நீதியான மற்றும் உண்மைக்கு ஆதரவு வழங்க தயாராகி விட்டார்கள். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியும் நேர்மையான தலைவர்களை களம் இறக்கி ஆட்சியை கைப்பற்ற தயாராக இருக்கிறோம்," தெப்ராவ் தொகுதியில் நடைபெற்ற 'மக்கள் மீது அக்கறை' கெஅடிலான் சூறாவளி பயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசினார்.

 

 

 

 

 

தெப்ராவ் நாடாளுமன்றத்தை பொருத்த வரையில் ஸ்தீவன் சோங் சிறந்த மக்கள் சேவை ஆற்றி வரும் தலைவர். பல ஆண்டுகளாக இந்த தொகுதியில் மக்கள் மனம் கவர்ந்த தலைவராக இருந்து வருகிறார் என்று பெருமிதம் கொண்டார். இந்த சூறாவளி பயண நிகழ்ச்சி ஜோகூர் மாநில மக்களின் ஆதரவை அளவிடும் ஒரு கருவியாக பயன் படுகிறது என்றும் மக்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கம் சிறந்த முறையில் செயல்படுத்தி வரும் திட்டங்களை கண்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் ஐயமில்லை என்றார்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.