NATIONAL

ஊழல்கள் இல்லையெனில், இலவச கல்வி சாத்தியமாகும்

14 நவம்பர் 2017, 4:19 AM
ஊழல்கள் இல்லையெனில், இலவச கல்வி சாத்தியமாகும்
ஊழல்கள் இல்லையெனில், இலவச கல்வி சாத்தியமாகும்

ஷா ஆலம், நவம்பர் 14:

நாட்டின் நிர்வாகத்தில் ஊழல்கள், மோசடிகள் மற்றும் வீண்விரயங்கள் ஏற்படாமல் தடுத்தால் பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி சாத்தியமாகும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் கூறினார். கல்வி மேம்பாடு ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைகிறது என்று விவரித்தார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் பொருளாதார சவால்கள் மிகுந்த காலகட்டத்திலும் தற்போது எல்லா நிலையிலும் இலவசக் கல்வியை அமல்படுத்தி வருகிறது என்றார்.

"   பெரும்பாலும் ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவிகள் மூலம் பல்வேறு மாணவர்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு காரணம் மத்திய அரசாங்கம் கல்விக்கான ஒதுக்கீட்டை குறைத்து விட்டது ஆகும். ஏ4 தாள்களை வாங்குவதற்கு கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளி நிர்வாகம் பணத்தை கேட்கிறது. தேர்வுத்தாள் தயாரிப்பதற்கு கூட பெற்றோர்கள் கட்டணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது," என்று லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ஸம்சூல் அன்வார் நஸரா, ஆரம்பக்கல்வி முதல் இடைநிலைக்கல்வி வரை இலவசம் என்ற கூற்றை மேற்கோள்காட்டி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

மேலும் பேசுகையில், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான நிக் நஸ்மி குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்கள் மேற்படிப்புக்காக அதிக வட்டியை கொண்ட கல்விக் கடனுதவியை பெற்று திரும்பி செலுத்த முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது என்று வலியுறுத்தினார்.

#வீரத் தமிழன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.