NATIONAL

பினாங்கு முதல்வரின் ஊடக அறிக்கை

6 நவம்பர் 2017, 10:01 AM
பினாங்கு முதல்வரின் ஊடக அறிக்கை

ஜோர்ஜ் டவுன், நவம்பர் 6:

பினாங்கு வரலாற்றில் மிக மோசமான புயலையும் வெள்ளத்தையும் சந்தித்துள்ளதால்  மத்திய  அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு, உதவியின் பின்னர் நிலைமை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் பினாங்கு மாநில அரசு அவசர நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் ஆலோசனையையும் அறிவுரையையும் அவசியமாகக் கருதினால், அவசரகால நிலைமை மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்  தெரிவித்தார்.

அனைத்து ஊழியர்களும் தங்கள் பணி நேரத்தை அதிகமாக வழங்குவதன் வாயிலாக, மீட்புப் பணிகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்என்று அரசு அரசாங்கம் நம்புகிறது. அனைத்து மாநில, மத்திய அரசாங்க அமைப்புகளும் விரைவில் ஆககப்பூர்வ நடவடிக்கைகளை கையாளும் என்றார்.

சில இடங்களில் மிக அதிகமான மழைப்பொழிந்துள்ளதால் மிக மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. வட செபெராங் பிறையில் 372 மி.மீ.  பதிவு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு போக்குவரத்து ஆட்சி மன்றம்  வெள்ளம் குறித்த  மேலும் விவரங்களை வழங்கும் என அவர் கூறினார்.

பினாங்கிலும் கெடாவிலும் கடுமையான மழை பொழியும் என மழை பெய்யும் என்று மலேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஜாலான் பி. ரம்லியில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி  உட்பட  முதியோர்  இருவர் உறுப்பினர்களுக்கு உயிரிழந்ததை முன்னிட்டு இரங்கல் தெரிவித்தார். இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட உயிரிழப்புகள், உடைமைகள் சேதமடைந்ததில் மாநில அரசாங்கம் வருத்தம் அடைகிறது.

லிம் குவான் எங்

பினாங்கு மாநில முதல்வர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.