SELANGOR

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

17 அக்டோபர் 2017, 7:39 AM
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

    மலேசியா வாழ் இந்து மக்களுக்கும் பொதுவாக சிலாங்கூர் மாநில இந்து மக்கள் அனைவருக்கும் சிலங்கூர் மாநில‌ அரசின் சார்பில் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இருளை அகற்றி ஒளியை தரும் இந்த தீபவளி திருநாளில் அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றென்.தீப ஒளி அல்லது ஒளி வெள்ளத்தின் பேரணி என்ற பொருள் படும் தீபாவளி திருநாள், மலேசியாவின் முதன்மைக் கொண்டாட்டங்களில் ஒன்று. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மதத்தினரும் சிறப்புற கொண்டாடும் பண்டிகையாக இது திகழ்கிறது. இத்தீபத்திருநாளில் புத்தாடையுடன் புத்துனர்சி கொண்டு புதியதோர் விடியலை நோக்கி நமது சமுதயாம் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதியதோர் விடியல் என்பது வெரும் பகல் கனவாகமல் அதனை நிருபிக்க சிலங்கூர் மாநில அரசு அவபோது மக்களின் நலன்கருதி பல்வேரு திட்டங்களை அமல்படுத்தி வருகிண்றது. 17 மக்கள் நலன் திட்டங்கள் பல்வேரு வயதினருக்கும் மற்றும் இனதினருக்கும் பாகுபாடுன்றி வழங்கப்பட்டு வருகின்றது. இதனை நமது சமுதாயத்தினரும் அவர்களின் சட்டமன்ற உருப்பினர்களை அனுகி பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்பதற்கேற்ப, எங்களின் இந்த 9 வருட ஆட்சியை தேர்ந்தெடுத்து இனிதே செயல்பட ஆதரித்த நீங்கள் தொடர்ந்து எங்களை வரும் காலங்களில் ஆதரித்து வழிநடத்தும்மாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த 2017ம் ஆண்டு தீபாவளி திருநாளில் உங்களை மகிழ்ச்சிசூழவேண்டும் என்று பிரார்திக்கிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

நன்றி,

கணபதிராவ் வீரமன்

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும்

கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.