SELANGOR

குப்பைகள் தொடர்பிலான புகார்கள் செலாயாங்கில் குறைந்து வருகிறது

11 அக்டோபர் 2017, 3:09 AM
குப்பைகள் தொடர்பிலான புகார்கள் செலாயாங்கில் குறைந்து வருகிறது

செலாயாங், அக்டோபர் 11:

குப்பைகளை அகற்றும் பணியினை மேற்கொண்டு வரும் கே.டி.இ.பி வேஸ்ட் (KDEBWM) மேனஜ்மேன் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதோடு அஃது நன் நிலையில் பங்களித்துவம் வழங்குவதாகவும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிஹான் யோங் ஹியான் வா தெரிவித்தார் .சம்மதப்பட்ட நிறுவனத்தின் ஆக்கப்பூர்வ பணிகளால் செலாயாங் வட்டாரங்களில் குப்பைகள் குறித்த புகார்கள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து புகார்கள் செலாயாங் நகராண்மைக் கழகத்தில் குறைந்து வருவதோடு சுற்றுச்சூழலின் தூய்மையும் அழகியலும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டும் தரம் உயர்ந்தும் வருவதாக கூறிய ஆட்சிக்குழு உறுப்பினர் இந்த ஆய்வு கடந்த மார்ச் மாதம் அந்நிறுவனம் இப்பணியினை மேற்கொண்டது முதல் வரையறுக்கப்பட்டதாகவும் கூறினார்.கடந்த மார்ச் மாதம் 1300ஆக இருந்த புகார்கள் தொடர்ந்து குறைந்து தற்போது ஆகஸ்ட் மாதம் அவை 36 ஆக மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில்,சம்மதப்பட்ட நிறுவனத்திற்கும் அதன் துணை குத்தகை நிறுவனங்களுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்த ஆட்சிக்குழு உறுப்பினர் இந்நிலை தொடர்ந்து நிலைக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.செலாயாங் நகராண்மைக் கழக வளாகாத்தில் நடைபெற்ற மாநில அரசு மற்றும் சம்மதப்பட்ட நிறுவனத்திற்கிடையிலான புரிந்துணர்வு கையொப்பம் நிகழ்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து அந்நிறுவனத்திற் இன்னும் 7 ஆண்டுகளுக்கான குத்தகையை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில் செலாயாங் நகராண்மைக் கழகம் புதியதொரு இலக்கை நோக்கி பயணிக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர் இந்நிகழ்வின் போது குப்பைகளை அகற்ற ஜப்பான் நாட்டின் தயாரிப்பான அதிநவீன குப்பைகள் அகற்றும் லாரிகளும் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிநவீன குப்பை அகற்றும் லாரிகளின் செயல்பாட்டினால் செலாயாங் நகராண்மைக் கழகம் தூய்மையாகவும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் நிறைந்த நகராண்மைக் கழகமாகவும் உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.வழங்கப்பட்ட அனைத்து லாரிகளின் செயல்பாடுகளும் அதன் செல்லும் பாதைகளும் அதீநவீன கருவிகளால் (எவிஎல்எஸ்) மூலம் கண்காணிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் ஐ-கிளின் செயல்முறை திட்டத்தின் கீழ் சம்மதப்பட்ட தனியார் நிறுவனம் அதன் செயல்பாட்டினை மேற்கொள்வதோடு புகார்கள் இல்லாத நகராண்மைக் கழகமாய் செலாயாங் நகராண்மைக் கழகத்தை உருவாக்கும் இலக்கையும் கொண்டிருக்கும் என்றார்.இஃது சிலாங்கூர் மாநிலத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் நிலைக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.