RENCANA PILIHAN

அஸ்மின் அலி: ஜமாலின் நடவடிக்கை பண்பற்றது

6 அக்டோபர் 2017, 5:01 AM
அஸ்மின் அலி: ஜமாலின் நடவடிக்கை பண்பற்றது

சபாக்  பெர்ணாம், அக்டோபர் 6:

மாநில செயலகத்தின் முன் மது பாட்டில்களை உடைத்து முரட்டுத்தனமாக நடந்து கொண்ட  டத்தோ ஸ்ரீ  ஜமால் முஹமட்  யூனுஸ் பண்பு தெரியாதவர் என்று

மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகம்மது அஸ்மின் அலி சாடினார்.

அரசு சாரா இயக்கத்தின் தலைவரான ஜமாலின் நடவடிக்கை, குண்டர்த்தன்மையை

ஒத்திருப்பதாகவும், பொது உடைமைகளை நாசம் செய்திருப்பது ஜனநாயக வரம்புக்கு எதிரானது என்று அஸ்மின் தெரிவித்தார்.

எதிர்பைத் தெரிவிக்க நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஜனநாயக உரிமை என்றாலும் அந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தை மீறி குண்டர்த்தனமாக நடத்தப்படுவதை ஆதரிக்க முடியாது என்று  அஸ்மின் தெரிவித்தார்.

கம்போங் ஹாலா சாரா பாரு மண்டபத்தில் நடந்த  5A நோட்டிஸ் வழங்குதல் மற்றும் மக்கள் கருணை திட்ட  முன்முயற்சி (ஐபிஆர்) நிகழ்ச்சியை நிறைவுசெய்யும் பொழுது நிருபர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். இவ்விவகாரம் தொடர்பாக, சுங்கை பெசார் அம்னோ தலைவரான ஜமால் மீது போலீஸ்

படை தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தாம் நம்புவதாக அஸ்மின்

தெரிவித்தார்.

முன்னதாக, சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவர், உதவி ஆணையாளர் பட்ஜில் அஹமட், சம்பவத்தைப் புகார் செய்த பாதுகாப்புப் படையினரின் அறிக்கை அடிப்படையில்  ஜமால் மற்றும் ஏழு நபர்களைக் கைது

செய்ததாகத் தெரிவித்தார்.

சட்டவிரோத பேரணிகளை உள்ளடக்கிய குற்றவியல் கோரிக்கையின் 143 வது பிரிவின்

கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும்  மேலும், பொதுத் தீங்கு விளைவிப்பதற்கான நடத்தை தொடர்பான 268 வது தண்டனைப்  பிரிவுடன்  சேர்ந்து

வாசிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

#சரவணன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.