ANTARABANGSA

நொடியில் ஜப்பான் எரித்து விடுவோம் என்று வட கொரியா எச்சரிக்கை

6 அக்டோபர் 2017, 3:36 AM
நொடியில் ஜப்பான் எரித்து விடுவோம் என்று வட கொரியா எச்சரிக்கை

உலகம், அக்டோபர் 6

சண்டை மூண்டால்  ஒரு நொடியில் ஜப்பான் எரிந்துவிடும் என்று வட கொரியா செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட ஒரு கட்டுரையின் மூலம்  ஜப்பானுக்கு வட  கொரியா  அணு ஆயுத தாக்குதல்  அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் சாட்டப்பட்டு வரும் குற்றச் சாட்டு எப்போது அணுவாயுத யுத்தமாக உருவெடுக்கும் என்பது தெரியாது என்று அவ்வறிக்கை கூறுகிறது.

வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை நிறுத்துவதற்கு உலகத்தை வற்புறுத்த முயன்றபின் பியோங்கியாங் அதன் அணு ஆயுதங்களை ஜப்பானில் பயன்படுத்தத் தயங்காது என்று

அந்தச் செய்தி அறிக்கை கூறுகிறது.

தன்னுடைய  அணு குண்டு தாக்குதலுக்கு ஜப்பான் முதல் இலக்கு ஆகலாம். மீண்டும் ஓர் அழிவை அது எதிர் நோக்கலாம். என்று வட கொரிய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட ஒரு கட்டுரையின் மூலம்

அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தற்காப்பு செலவினங்களை அதிகரித்திருப்பதும்,திடீர் தேர்தலை தேர்தலை நடத்துவதன் மூலமும் ஜப்பானியப்  பிரதம மந்திரி ஷின்ஜோ அபே,  தனது நாட்டின் அரசியலில் ஒரு மோசமான இலக்கு கொண்டிருப்பதாக 'மற்றொரு KCNA

அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த செப்டெம்பரில் நியூயோர்க்கில் நடந்த  ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை (ஐ.நா.) கூட்டத்தில் கலந்து கொண்ட ஷின்ஜோ அபே, அமெரிக்கா, வட கொரியா

மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனை பேச்சுவார்த்தைக்கு அழைக்கக் கூடாது என்று அமெரிக்காவை வலியுறுத்தினார்.

தற்போது ஐ.நா. வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை சுமத்தியுள்ளது. அதன் அணுசக்தித் திட்டத்தை நிறுத்துவதற்கு நாட்டிற்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.

#சரவணன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.