NATIONAL

சபா அமைச்சரகத்தில் நடந்த நிதி மோசடி, முன்னாள் துணைச் செயலாளர் உட்பட மூவர் கைது

6 அக்டோபர் 2017, 3:34 AM
சபா அமைச்சரகத்தில்  நடந்த நிதி  மோசடி, முன்னாள் துணைச் செயலாளர் உட்பட மூவர் கைது

புத்ரா ஜெயா, அக்டோபர் 6:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), சபாவில் ஒரு மத்திய அமைச்சரகத்தில் நடந்த நிதி  மோசடி குறித்து விசாரணை நடத்தியதில்  முன்னாள் துணைச் செயலாளர் உட்பட மூன்று நபர்கள்  கைது செய்யப்பட்டனர். 40 வயதான முன்னாள் துணை செயலாளர் புத்ராஜெயாவின் MACC தலைமையகத்தில் நேற்று காலை 8.15 மணிக்கு கைது செய்யப்பட்டதாக பெர்னாமா செய்தி அறிக்கை

கூறுகிறது.

நேற்று காலை 8.45 மணிக்கு MACC அலுவலகத்தில்,52 வயதான கட்டுமான நிறுவனம்

உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதே நாளில் சபா MACC அலுவலகத்தில்,6.40pm மணிக்கு, இயக்குனர் மற்றும் 46 வயதான நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, சபாவில்,15 இடங்களில், அதிகாரி   மேற்கொண்ட  உளவு

நடவடிக்கையில்,  RM150 மில்லியனுக்கும் மேலான தொகை ஆணையயத்தால்

முடக்கப்பட்டது.

#சரவணன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.