RENCANA PILIHAN

நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை

5 அக்டோபர் 2017, 2:18 AM
நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் கொண்டாட்டங்களுக்குத்  தடையில்லை

ஷா ஆலம், அக்டோபர் 5:

எல்லா நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு பண்டிகை கொண்டாட்டமும்

ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்று டத்தோ சீரி முகம்மது அஸ்மின் அலி

கூறினார்.

இந்தப் பிரச்சினையைப  பெரிதாக்க வேண்டிய அவசியம் கிடையாது காரணம் ஒவ்வொரு

அனுமதிப்பும் உள்ளூர் அமலாக்க  அதிகாரிகள் (PBT) விதித்திருக்கும் சட்ட

முறைகளுக்கு உட்பட்டது.  விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கும்

விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவது  பிரச்சினை கிடையாது. இதுபோன்ற

ஒப்புதல்கள் முந்தைய ஆண்டுகளிலும் கொடுக்கப்பட்டது என்று  மந்திரி பெசார்

தெரிவித்தார்.

முன்னதாக, மூத்த எக்சோ, டத்தோ  'டெங் சாங் கிம் சுட்டிக்காட்டியபோது,

அத்தகைய விழாக்களுக்கான  அங்கீகாரம் உள்ளூர் அரசாங்க சட்டத்தின்

அடிப்படையில், உள்ளூராட்சி  அதிகாரத்தின் கீழ் இருந்தது என்று கூறினார்.

சட்டம் பரிந்துரைக்கு உட்பட்டு இரு சாராரின் வாதங்களை கேட்பதுதான்

ஜனநாயகம். இந்த  ஜனநாயகத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள்

பரிசீலிக்கப்படுகின்றன. இந்த வழியில், ஊராட்சி அமலாக்கம்  ஒப்புதல்

கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களும் உண்டு. நிபந்தனைகளின்  தேவைகளைப்

பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டதுமுண்டு என்றார்

டெங் .

வட கிள்ளான் மாவட்ட போலீஸ்  தலைமையகத்திலிருந்து நிபந்தனைக்குட்பட்ட

ஆதரவைப் பெற்றனர். இதற்கு முன்னர் கிள்ளான் நகராட்சி கவுன்சில், சென்ட்ரோ

மால் ஜேர்மன் உணவு & பேவேர் விழா' நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது

காரணம் ஏற்பாட்டாளர்கள் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைக் கடைபிடித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  இஸ்லாமியர்களுக்கு

விதிக்கப்பட்டது தடை முதன்மை விதியாக  உள்ளது.

அதே நேரத்தில், அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில்

திட்டமிடப்பட்டிருக்கும் அக்டோபர்ஃபெஸ்ட் 2017 நிகழ்ச்சிக்கான  விண்ணப்ப

ஒப்புதலை  பெட்டாலிங்  ஜெயா சிட்டி கவுன்சில் இன்னும் வழங்கவில்லை.

நிபந்தனைகளை ஏற்பாட்டாளர்கள் நிறைவேற்றாத காரணமே ஒப்புதல்ஏற்காமல்

இருக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.