NATIONAL

ரிம100 மில்லியன் ஊழல் சம்பவத்தை எம்ஏசிசி அம்பலப்படுத்துமா?

4 அக்டோபர் 2017, 1:39 AM
ரிம100 மில்லியன் ஊழல் சம்பவத்தை எம்ஏசிசி அம்பலப்படுத்துமா?

ஷா ஆலம்,அக்டோபர் 4:

ஓர் அமைச்சகத்தின்  உயர் அதிகாரிகளால்  களவாடியதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரிங்கிட் திருட்டுச் சம்பவமத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அம்பலப்படுத்துமா? வறுமைக் கோட்டுக்குக்  கீழ் உள்ள ஏழைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை,

அவ்வமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி களவாடியதாகப்  பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

மிக விவேகமான முறையில் கையாளப்பட்டிருக்கும் இத்திருட்டை விசாரணை செய்து வரும் லஞ்ச ஒழிப்பு ஆணையம் பல சவால்களை எதிரி நோக்கி வருவதாக நியூஸ்

ஸ்ட்ரேட்  டைம் ஆங்கிலப் பத்திரிகை  தகவல் தெரிவித்துள்ளது. யாரும்

மோப்பம் பிடிக்க முடியாத வண்ணம்  கொள்ளையடித்தவனின் திருட்டுச் செயல் மிகவும் தந்திரமாகவும், கவனமாகவும் கையாளபட்டிருப்பதாக பத்திரிகை சிறப்பு செய்தி கூறுகிறது.

சொந்த கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக

பேங்க் நெகரா மலேசியாவின் 'சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை அறிக்கை' கூறுகிறது. இந்த அறிக்கையின் மூலம் பெயரிடப்படாத ஐந்து சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளியான அறிக்கைபடி மோசடிக்கு பலியான திட்டங்களில் ஏழை மாணவர்களுக்கான  உணவு உதவித் திட்டமும்  அடங்கும். இதுவரை நாடு

எதிர்நோக்கிய ஊழல் சம்பவங்களில் இச்சம்பவம்  அனைத்துக்கும்  பெரிய ஊழல் சம்பவமாக அமையும்  என்று பத்திரிகை கோடிகாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு,  100 மில்லியன் ரிங்கிட் நிதி மோசடியில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஒன்பது மூத்த அதிகாரிகளை ஊழல்

தடுப்பு ஆணையம் கைது செய்தது. பொது வசதி பொது நலம் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை 10 நிறுவனங்களுடன் சேர்ந்து மோசடி செய்த குற்றத்திற்காக அவர்கள் கைது

செய்யப்பட்டனர். இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் படி பணிகள்

பூர்த்தியாகிவிட்டதாகச் சொல்லி அமைச்சிடமிருந்து பணம் பெறப்பட்டது. ஆனால் அதற்கான வேலை தொடங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

#சரவணன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.