NATIONAL

நமது மலேசிய வரலாற்று நாயகர்கள்

3 அக்டோபர் 2017, 5:53 AM
நமது மலேசிய வரலாற்று நாயகர்கள்

கோலா லம்பூர், செப்டம்பர் 3:

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் தொழிலாளர் நலனுக்காக போராடிய ஒப்பற்ற தொழிற்சங்க வாதி தோழர் கணபதி பிரிட்டிஷாரால் கை செய்யப்பட்டு தூக்கிலிடப்படார்.

சுதந்திரத்திக்கு பின் மலேசியர்களின் அரசியல் நலனுக்காக பெரும் போராட்டம் நடத்தினார் ஜனநாயக செயல் கட்சியின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான தோழர் பட்டு. மலேசிய அரசால் உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். பின்னர் நோய்வாய் பட்டு அமரரானார்.

தொழிலாளர் நலனுக்காகவும், மலேசியர் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் பெரும் போராட்டம் நடத்தியவர் மிக மூத்த அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியுமான தோழர் வி.டேவிட்.இவரும் உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். விடுதலைக்கு பின்னர் நோய்வாய் பட்டு அமரரானார்.

25.11.2007 ஆம் நாள் மலேசிய இந்தியர் வரலாற்றில் ஒரு பொன் நாள். முதன் முதலாக ஆளும் தேசிய முன்னணிக்கு எதிராக லட்சக்கணக்கான இந்தியர்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்த நாள் " ஹின்றாப் போராட்ட்ம் ". இந்த மா பெரும் போராட்டத்தை ஏற்பாடு செய்து வழி நடத்தியவர்கள் ஹின்றாப் தலைவர்கள். வழக்கறிஞர் வேதமூர்த்தி, வழக்கறிஞர் உதயகுமார், வழக்கறிஞர் மனோகரன் மலையாளம், வழக்கறிஞர் கெங்கதாரன், வழக்கறிஞர் கணபதிராவ், வங்கி அதிகாரி வசந்தகுமார் ஆகியோர்.

இந்திய சமுதாயத்தின் புரட்சிக்கு வித்திட்ட காரணத்திக்காக உதயகுமார், மனோகரன், கெங்கதாரன், கணபதிராவ், வசந்தகுமார் ஆகியோர் உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். படித்த வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய வரலாற்று பூர்வமானது ஹின்றாப் போராட்டம்.

இந்த போராட்டத்தில் மிக முக்கியமானவர் வேதமூர்த்தி. இவர் இந்த போராட்டத்தின் விளைவால் 4 ஆண்டுகள் நாடு கடந்த வாழ நேரிட்டது. இப்படி பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறைதண்டனை அனுபவித்து உயிர் ஈகம் செய்த தலைவர்களை நாம் போற்றாமல் அவமதித்தால் தர்மம் தலைக்காது.

இவர்களை நாம் போற்றாவிட்டலும் சரி, தூற்றாமல், அவதூறாக பேசாமல், எழுதாமல் இருங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

"என்னன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகர்க்கு"

என்ற வள்ளுவன் வாக்கை அனைவருக்கும் நினைவுறுத்துகிறோம். நன்றி.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.