SELANGOR

ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் ஊடவியலாளர்கள் முற்றுகை

2 அக்டோபர் 2017, 4:42 AM
ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் ஊடவியலாளர்கள் முற்றுகை
ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் ஊடவியலாளர்கள் முற்றுகை

ஷா ஆலம்,  அக்டோபர் 2:

ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தை மலேசியா மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முற்றுகை இட்டனர். ஏறக்குறைய 100 ஊடகவியலாளர்கள் உய்ரநீதிமன்றத்தின் வளாகத்தில்

காணப்பட்டனர். அதிகாலை 5 மணி முதல் அங்கு காத்துக் கொண்டிருந்த

ஊடகவியலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்கள் போலீஸ்காரர்களால் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்ற வழக்கு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மணி காலை 8 இவ்வேளையிலே ஊடகவியலார்களின் காமிராக்கள் மின்னல் வேகத்தில் அவர்களைக் க்ளிக் செய்து கொண்டிருந்தன.

பிற வழக்குக்காக அவ்வளாகத்தில் காத்திருந்தவர்கள் இடி மின்னல்

பிடித்தாற்போல் நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தனர். உலகச்  சக்திகளை ஆட்டிப்படைக்கும் சர்வாதிகாரி என்று வர்ணிக்கப்படும் வட கொரியா தலைவன் கிம் ஜோங் உன்  ஒன்று விட்ட சகோதரனைக்  கொலை செய்த

குற்றத்தை எதிர்நோக்கி யிருக்கும் இந்தோனேசியப்  பெண் சித்தி அயிஷா (வயது 25), வியட்நாம் பெண் டோன் தீ ஹுவோங்( வயது 28) ஆகிய இருவரையும் போலீசின் கடுமையான காவலுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது அந்தக்

காட்சியைப் பதிவு செய்ய ஊடகவியலாளர்கள் முந்தினர். இருப்பினும் வழக்கு விசாரணை அறையில் உள்ளூர் வெளியூரைச் சேர்ந்த 20 ஊடகப் பிரதிநிதிகள்

மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணையில் குற்றம் சுமத்தியர்வர்கள் சார்பில் 30 முதல் 40

சாட்சிகள் அழைக்கப்படுவர். இவர்களில்  VX நரம்பியல் நிபுணர் மற்றும் அந்நிய நாட்டவர்களும் அடங்குவர்.சிலாங்கூர் மாநில ழக்கு விசாரணை இயக்குனர் முஹமட் இஸ்கண்டர் அஹ்மாட்

வழக்கறிஞர் குழுவைத் தலைமைத் தாங்குவார். குற்றம் சாட்டப்பட்ட ஆஷா

சார்பில் வழக்கறிஞர் கூய் சூன் செங் மற்றும் இஷாம் தே போ தேய்க்

ஆஜராகின்றனர். டத்தோ நரேன் சிங் டோன்-க்கு ஆஜராகிறார்.

மார்ச் முதல் தேதியில் குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்களும் செப்பாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இவர்களின் ஒப்புதல் பதிவு

செய்யப்படவில்லை காரணம் மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தின் அதிகமாகும். பிறகு மே  30 ஆம் திகதி இவ்வழக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்துக்குக்

கொண்டு செல்லப்பட்டது.

பிப்ரவரி 13ஆம் திகதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்,

மாகாவுக்குப்  பயணிக்க விருந்த ஜொங் நாமின் மேல் திடீர் தாக்குதலை நடத்திய இரு பெண்கள் அவரின் முகத்தில் VX நரம்பு தாக்குதல் அமிலத்தைத்

தடவியதாகப் போலீஸ் விசாரணை கூறுகிறது. கிம் கோல் எனும் பெயரில் கடப்பிதழை வைத்திருந்த ஜோங் நாம் புத்ரா ஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்

suspekkorea

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.