SELANGOR

வரவு செலவு திட்டம் 2018:சிலாங்கூர் 2 சிறப்பு வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

25 செப்டெம்பர் 2017, 9:37 AM
வரவு செலவு திட்டம் 2018:சிலாங்கூர் 2 சிறப்பு வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது
வரவு செலவு திட்டம் 2018:சிலாங்கூர் 2 சிறப்பு வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 25:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் குறைந்த வருமானம் பெறும் தனிநபர் வீடு வாங்குவதற்கு இரண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது என்பதை சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர்புற ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் சுட்டிக் காட்டினார். இதன் மூலம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதை கண்கூடாக பார்க்கிறோம்.

SELANGOR SOHO - ISKANDAR

 

 

 

 

"   இது தேர்தல் காலத்திற்கான வாக்குறுதி அல்ல, மாறாக மாநில அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு எந்நேரத்திலும் சேவை செய்து வருவதை காட்டுகிறது," என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

இதற்கு முன்பு சிலாங்கூர் மாநில அரசாங்கம் 'ஸ்மார்ட் ஹோம் பயர்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தி குறைந்த வருமானம் பெறும் தனிநபர், வீட்டின் வைப்பு தொகையை கட்டுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

இஸ்கண்டர் மத்திய அரசாங்கத்தை பேங்க் நெகாராவின் வங்கிக் கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். சிலாங்கூர்கூ வீடுகள் வாங்கும் நபர்கள் பலர் வங்கிக் கடன் கிடைக்காமல் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது என்று சுட்டிக் காட்டினார்.

#கேஜிஎஸ்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.