SELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூரை கைப்பற்றும் முயற்சியா? எனது வாழ்த்துக்கள்

24 செப்டெம்பர் 2017, 5:02 AM
மந்திரி பெசார்: சிலாங்கூரை கைப்பற்றும் முயற்சியா? எனது வாழ்த்துக்கள்
மந்திரி பெசார்: சிலாங்கூரை கைப்பற்றும் முயற்சியா? எனது வாழ்த்துக்கள்

பூலாவ் இண்டா, செப்டம்பர் 24:

சிலாங்கூர் அம்னோவிற்கு புதிய தலைவர்களே கிடைக்காமல் மறுசுழர்ச்சி தலைவர்களான முன்னாள் மந்திரி பெசார்களின் உதவியை நாடியது மக்களின் ஆதரவை பெற எதையும் செய்ய தயாராக இருப்பதைக் காட்டுகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். டான்ஸ்ரீ நோ ஒமார் தலைமையில் இயங்கும் சிலாங்கூர் தேசிய முன்னணி மறுசுழர்ச்சி தலைவர்களைக் கொண்டு சிலாங்கூரை வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

"   அவர் சிலாங்கூரை கைப்பற்றப் போகிறாரா? மூன்று முன்னாள் மந்திரி பெசார்களா? மூன்றோடு சேர்ந்து இன்னொருவரும் உண்டா? ஏன் முன்னாள் மந்திரி பெசார்களை அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது? தற்போதைய தலைமைத்துவம் என்னவாயிற்று? நோ ஒமார் மற்றும் தற்போதைய சிலாங்கூர் தேசிய முன்னணி தலைமைத்துவம் இளையோர் மற்றும் மக்களின் வாக்குகளை கவரும் ஆற்றல் கொண்டது என்று சிலர் கூறுகின்றனரே? அம்னோவின் இந்த நடவடிக்கை, தற்போதைய தலைமைத்துவம் சிலாங்கூர் மக்களின் ஆதரவை பெற தவறிவிட்டதை காட்டுகிறது. இது தான் உங்களின் பலம் என்றால், வெற்றி பெற வாழ்த்துக்கள்," என்று பூலாவ் இண்டாவில் நடைபெற்ற சிலாங்கூர் 'பயோ பே' தொடக்க விழாவிற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்

அஸ்மின் அலி மேலும் கூறுகையில், சிலாங்கூர் மக்கள் அந்த மூன்று முன்னாள் மந்திரி பெசார்களின் சரித்திரம் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

IMG_20170924_111920

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.