NATIONAL

அஸ்மின்: அவர் போகட்டும், விடுங்கள்

18 செப்டெம்பர் 2017, 8:00 AM
அஸ்மின்: அவர் போகட்டும், விடுங்கள்
அஸ்மின்: அவர் போகட்டும், விடுங்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 18:

டான்ஸ்ரீ முகமட் தாயிப் அம்னோவில் மீண்டும் இணைந்தது தொடர்பில் கெஅடிலான் உடனடியாக கலந்து ஆலோசிக்க தேவையில்லை என்று கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மாறாக கட்சி, மறுமலர்ச்சி கொள்கைகளை அமல்படுத்த புத்ரா ஜெயாவை 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

"   தனிப்பட்ட நபர்கள் வருவார்கள் பின்பு போவார்கள். நமக்கு மிக முக்கியம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது. போனவர்களை பற்றி நாம் கருத்து சொல்ல தேவையில்லை.தொடர்ந்து கட்சியில் இருப்பவர்கள் நமது போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்," என்று ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று முகமட் தாயிப் அம்னோவில் மீண்டும் இணைந்தார். அதற்கு முன்பு பாஸ் கட்சியிலும் அம்னோவில் இணைந்து கொள்வதற்கு முன் கெஅடிலான் கட்சியிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mat Taib

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.